அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ விழா! கோவையில் நடந்த ரகசியம்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்விஸ்வநாத் & சன்ஸ்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் கலையரங்கத்தில் ஆகஸ்ட் 02- ஆம் தேதி இரவு நடந்தது. ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் முன்னிலையில் கோலாகலமாக திருவிழா போல் நடைபெற்ற இந்த விழாவில் தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்சி, இயக்குநர் வெங்கி அட்லூரி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், ஹீரோ சூர்யா, ஹீரோயின் மமீதா பைஜூ, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ், தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் என பலர் கலந்து கொண்டனர்.

 

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

நிகழ்ச்சியில் பேசியவர்கள்…….

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் ,

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இது போன்றதொரு பிரம்மாண்டமான நிகழ்வை முதலில் எனக்கு வழங்கியது ஜிவி.பிரகாஷ் குமார் தான். நான் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருந்தபோது என்னை பாடலாசிரியராக்கி மிகப் பெரிய மேடையை கொடுத்தார். அவருடைய முதல் படத்திலிருந்து நான் அவருடன் இணைந்து பயணித்திருக்கிறேன்.

என் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் சூர்யா சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார். எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அவர் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் பாடலை எழுதுவதற்கான வாய்ப்பை கொடுத்தார். நான் இதுவரை ஹீரோக்களை போற்றி பாடும் பாடல்களை தான் எழுதி இருக்கிறேன். அந்தப் பாடலுக்கு நான் கத்தி பாடி உயிரை கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் முதல்முறையாக ஒருபட்டாம்பூச்சிபோதும் என்று சொல்லி பாடல் எழுத வைத்தார். அதுவும் ஒரு காதல் பாடல். அது ரசிகர்களாகிய உங்களின் வரவேற்பால் மிகப்பெரிய ஹிட் பாடல் ஆகவும் மாறி இருக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து ஒரு காதல் பாடலை எழுதி இருக்கிறேன். இது எனக்கு கிடைத்த ஒரு பாசிட்டிவான விசயமாக எடுத்துக் கொள்கிறேன். இதற்காக வெங்கிசூர்யாஜிவி பிரகாஷ் குமார்ஆகிய அனைவருக்கும் நன்றி“.

மமீதா பைஜூ

சூர்யாவுடன் ஏற்கனவே இணைந்து நடிக்க வேண்டிய வாய்ப்புமிஸ்ஆகிவிட்டது. ஆனால் இந்த முறை கடவுள் அந்த வாய்ப்பை எனக்கு வழங்கினார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அற்புதமான மறக்க இயலாத அனுபவம்.

மமீதா பைஜூ
மமீதா பைஜூ

படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்த்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். அவருடைய ஒழுக்கம்அணுகுமுறைகாட்சிக்கு தயாராகும் விதம்திரைக்கு பின்னால் அவரின் செயல்பாடுஎன பல விசயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அனைத்திலும் அவர் எனக்கு ஒரு சிறந்த இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தார். மிகவும் பெருந்தன்மையான சக நடிகர்

 ஜிவி பிரகாஷ் குமார்

இந்தப் படம் மிகவும் ஸ்பெஷலானது.  சூரரை போற்றுபடத்திற்குப் பிறகு நானும் சூர்யாவும் இணைந்து பணியாற்றிருக்கிறோம். அந்தப் படம்எங்கள் இருவருக்கும் முதன்முறையாக தேசிய விருதை வழங்கிய படம்.

அந்த தருணத்தில் சூர்யா சார் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய உதவியை செய்தார். அதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.

அதன் பிறகு வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் உருவானவாத்திபடத்திற்கும் எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு அவரது இயக்கத்தில்லக்கி பாஸ்கர்என்ற ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தில் இணைந்தோம். அதை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறோம். இதனால் இந்த படத்தில் என்னுடன் இரண்டு ஸ்பெஷல் ஃபோர்ஸஸ் இருக்கிறார்கள்.

 சூர்யா சார் இந்த படத்தில் எமோஷனலாகஅழகாகஅற்புதமாகநடித்திருக்கிறார். இது அனைவருக்கும் பிடிக்கும்.”

தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்சி 

 

இயக்குநர் வெங்கி அட்லூரி
இயக்குநர் வெங்கி அட்லூரி

இது என்னுடைய இரண்டாவது தமிழ்ப் படம். பழனிக்குச் சென்று, முருகனை தரிசித்து விட்டு, அதன் பிறகு கோவையில் தான் படப்பிடிப்பை தொடங்கினோம். படத்தினை விளம்பரப்படுத்தும் முதல் நிகழ்வையும் கோவையில் தான் தொடங்கி இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை கோயம்புத்தூர்  வெற்றியை வழங்கக் கூடிய இடம்.

என் மீதும், இயக்குநர் வெங்கி மீதும் நம்பிக்கை வைத்ததற்காக சூர்யாவிற்கு நன்றி. இந்தப் படத்தில் சூர்யா மிக இளமையாக நடித்திருக்கிறார். சூர்யாவின் ரசிகர்களுக்கு நான் ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நீங்கள் இந்தப் படத்தில் ஒருசஞ்சய் ராமசாமியை போன்ற ஒரு கதாபாத்திரத்தில் சூர்யாவை பார்க்கலாம்.

நான் தெலுங்கு தாய் மொழியை கொண்டிருந்தாலும் எனக்கு ஏராளமான தமிழ் மக்கள் நண்பர்கள். தமிழ் மக்கள் அனைவரும் எங்களது தயாரிப்பில் உருவானஅலகொண்ட வைகுந்தபுரம்படத்தை கொண்டாடினார்கள். நான் இதை  ஒப்பிடுவதற்காக சொல்லவில்லை. நாங்கள் இந்த படத்தின் மீது அந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருக்கிறோம்“.

 

இயக்குநர் வெங்கி அட்லூரி  இந்தப் படத்தின் பணிகளை பழனி முருகனின் ஆசியுடன் கோவையில் தான் தொடங்கினோம் என தயாரிப்பாளர் குறிப்பிட்டார். ஏனெனில் இந்த இடம்இந்த ஊர்இந்த மக்கள்அனைவரும் சூர்யா சாரின் சொந்தங்கள்.

இந்தப் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் விழாவை இந்தியாவில் எந்த நகரத்தில் வேண்டுமானாலும் எங்களால் நடத்தி இருக்க முடியும். ஆனால் சூர்யாவின் சொந்த மண்ணில்அவருடைய அன்பான ரசிகர்களுக்காகஇங்கு நடத்த தீர்மானித்தோம். உங்களின் வருகையால் இந்த நிகழ்ச்சி திருவிழா போல் அமைந்து, எங்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

இந்தப் படத்தின் கதையை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ராஜசேகரிடம் சொன்னபோது.. அவர் கதையைக் கேட்டு சில இடங்களில் கண்ணீர் விட்டார். உடனடியாக சூர்யாவை சந்தித்து கதை சொல்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். இதற்காக ராஜசேகருக்கு நன்றி.

அதன் பிறகு சூர்யாவை சந்தித்து முழு கதையையும் விவரித்தேன். அதைக் கேட்டு விட்டு உடனடியாக எனக்கு ஆசி வழங்கி, இப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறோம் என்றார். 2023 ஆம் ஆண்டில் சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்தேன். அதன் பிறகு அவருடன் இந்த படத்தில் இணைந்து அழகான படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இதற்காக அவருக்கும் நன்றி.

ஜிவி பிரகாஷ் குமாருடன் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும்…. ஒவ்வொரு விசயத்திற்கும்என்னை அவர் எப்போதும் ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார். என்னுடைய எதிர்பார்ப்பை விட எப்போதும் சிறந்த ஒன்றைதான் அவர் எனக்காக வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு ரசிகர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பத்தினரை அழைத்து வாருங்கள். அனைவரும் மகிழ்ச்சியை கொண்டாடுவார்கள். படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது உங்கள் மனதில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் இருக்கும்.

இது சூர்யாவுக்கு ஒரு நியூ ஏஜ் ஃபிலிம். இந்தப்படம் ஜென் ஸீ ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும்.

 சூர்யா

கோவை விமான நிலையத்திலிருந்து இந்த விழா நடைபெறும் இந்த தருணம் வரை இதனை ஒரு திருவிழாவை போல் கொண்டாடிவரும் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என் மீது நீங்கள் வைத்திருக்கும் இந்த அன்பிற்கு நன்றி.

ஒரு காரணத்திற்காக நான் என் பிறந்த நாளை கொண்டாடவில்லை. இருந்தாலும் ரசிகர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்என்ன செய்தீர்கள் என்பது எனக்கு தெரியும்.

கோயம்புத்தூர் பிறந்த மண் என்பதால் இங்கு வந்தவுடன் நிறையபிளாஷ்பேக்குகள் வந்து கொண்டே இருக்கிறது. அதில் ஒன்றை மட்டும் சொல்கிறேன். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை ஒவ்வொரு வருடத்திலும் கோடை விடுமுறைக்கு கோயம்புத்தூர் வந்து விடுவேன். கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து காரில் பயணிக்கும் போது சூலூர்காசி கவுண்டர் புதூர்புளியம்பட்டிகவுண்டம்பாளையம்இளையராஜாவின் பாடல்கள்ஆடு மாடு மேய்ப்பதுமாட்டு வண்டி ஒட்டுவதுவயலில் நடப்பது–  வரப்பில் உறங்குவது–  கிணற்றில் குதிப்பது.. என எல்லா செயல்களையும் செய்திருக்கிறேன்.

கடந்த வருஷம் தியாவையும், தேவ்வையும் அழைத்துக் கொண்டு வந்துஇந்த புளிய மரத்தில் தான் விளையாடினேன்…. இந்த கிணற்றில் தான் குதித்தேன்…. இந்த வாய்க்காலில் தான் படுத்துக் கொண்டிருந்தேன்என ஒவ்வொரு விசயத்தை அவர்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டேன். அதன் பிறகு குலதெய்வ கோயிலுக்கும் சென்று வந்தோம். இது எல்லாம் நான் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால்நாம் டிஜிட்டல் ஸ்கிரீனுடன் செலவழிக்கும்  நேரம் அதிகமாகி விட்டது. நான் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஆனால் குடும்ப உறுப்பினர்களுடன் செலவிடும் நேரம் குறைவாகிவிட்டது. அதனால் தயவு செய்து குடும்பத்தினருக்கான நேரத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக செலவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன் இதில் நானும் அடங்கி இருக்கிறேன். நானும் ஸ்கிரீன் நேரத்தை குறைத்துக் கொண்டு, குடும்பத்துடன் செலவிட வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

நினைவுகளை உருவாக்குங்கள். சேமித்திடுங்கள். அது ஊரில் இருக்கும்போதுதான் கிடைக்கும். இதனை ஒருபோதும் யாரும் தவற விட்டு விடாதீர்கள். ஃபோனை பார்ப்பதன் மூலம் கிடைக்கும் நினைவுகளை விட, உங்களை சுற்றி உள்ள மக்களைப் பற்றிஊரைப் பற்றிஉறவுகளைப் பற்றிநிறைய விசயங்களை பேசி, கலந்து உரையாடி, நினைவுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். இதைப் பற்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.

சிதாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் வம்சி சார்இந்த நிறுவனம் ஒரு ஆண்டிற்கு பத்திற்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்கும் நிறுவனமாக இருந்தாலும்…. ஒவ்வொரு படத்தின் பணிகள் குறித்து அவருக்கு எல்லா விசயங்களும் தெரியும். அவர் பணத்தை மட்டும் முதலீடு செய்யாமல்மக்களுக்கு எந்த மாதிரியான படத்தை வழங்குகிறோம்..? எப்படி வழங்க வேண்டும்..? என ஒவ்வொரு விசயத்திலும் கவனம் செலுத்தும் ஒரு அற்புதமான தயாரிப்பாளர்.

எனக்கு வெவ்வேறு இயக்குநர்கள்வெவ்வேறு அடையாளத்தை கொடுத்திருக்கிறார்கள். அதில்விஸ்வநாதன் & சன்ஸ்எனக்கு ஒரு புது அடையாளம். அந்த அடையாளத்தை கொடுத்தது இயக்குநர் வெங்கி. நான் இதைப் போன்றதொரு படத்தில் நடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அவருடைய எழுத்தின் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. இந்தப் படத்தில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள். அந்த மூன்று கதாபாத்திரங்களையும் எழுத்தில் அழகாக உருவாக்கியிருக்கிறார். உறவுகளைப் பற்றி அற்புதமாக பேசியிருக்கிறார். இந்த படத்தை பார்க்கும்போது உங்களின் உதட்டோரம் சின்ன புன்னகை எட்டிப் பார்க்கும். இது படம் முழுவதும் இருக்கும்.

இந்தப் படத்தில் ரொமான்ஸ்ஃபேமிலிகாமெடிஎன எல்லாம் இருக்கும். ஹீரோயிச மும் இருக்கும். எல்லாம் கலந்த ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும். இயக்குநர் வெங்கி சொன்னது போல்.. இது என்னுடைய ரசிகர்களுக்கான படம் மற்றும் என்னுடைய ரசிகர்களின் குடும்பத்தினருக்கான படமும் கூட. இந்த நிகழ்ச்சியை திருவிழா போல் மாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி”.

 

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.