வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைவெள்ளம் குறித்த முன்னெச்சரிக்கை!

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைவெள்ளம் குறித்த தகவல்களை முன்கூட்டியே எளிதாக பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு தமிழக அரசு டி.என்.அலர்ட் (TN-ALERT -Mobile App) என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலி பொதுமக்கள் எளிய முறையில் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. TN- ALERT –Mobile App  மூலமாக பொதுமக்கள் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்துகொள்ளலாம். இதில் அடுத்தடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு, தற்போதைய வானிலை, தினசரி மழை அளவு, செயற்கைகோள் புகைப்படங்கள், பேரிடர் காலங்களில் பாதிக்கக்கூடிய

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பகுதிகளின் விவரங்கள், பேரிடரின் போது செய்ய கூடியவை செய்யக்கூடாதவை போன்ற அறிவுரைகள், தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு விவரம் போன்ற விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

Heavy rain alert
Heavy rain alert

மேலும், இந்த செயலியின் மூலம் மழை, வெள்ளம் தொடர்பான புகார்கள் தெரிவித்தால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் இலவச தொலை பேசி எண்:1077 (0431-2418995) என்ற எண்ணலும் பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

இந்த TN- ALERT செயலியை ’Google Play Store” மற்றும் ’IOS App Store”-ல் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கு ஏதுவாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பேரிடர் காலத்தில் எச்சரிக்கை நிலவரங்கள் குறித்து அறிய மிகவும் பயனுள்ளதாக உள்ள வுே-யுடுநுசுவு ஆழடிடைந-செயலியினை பொதுமக்கள் அனைவரும்  மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், முன்கள பணியாளர்கள், அரசுசாரா அமைப்பினர் (NGOs)  அனைவரும் பதிவிறக்கம்

செய்திட வேண்டும் எனவும், இந்த செயலி நிறுவப்பட்டால் செல்போன்  Switch off  ஆகி உள்ள நிலையிலும் பேரிடர் காலத்தில் எச்சரிக்கை எழுப்பும் வண்ணம் உருவாக்கப்பட்டு உள்ளது எனவும், மேலும் அந்த எச்சரிக்கை செய்தியினை படித்தால் மட்டுமே அதன் எச்சரிக்கை ஒலி அளவு குறையும் வகையில்  உள்ளதால் மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

செய்தி வெளியீடு

உதவி இயக்குநர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

திருச்சிராப்பள்ளி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.