“முக்குலத்தோருக்கே முக்கியத்துவம்” தேனி திமுகவில் அதிருப்தி அலை

0

“முக்குலத்தோருக்கே முக்கியத்துவம்” தேனி திமுகவில் அதிருப்தி அலை

“தேனி மாவட்டத்தில் அமைச்சர் இல்லை என்று கூறவேண்டாம் நிரந்தர அமைச்சராக ஐ.பெரியசாமி இருக்கிறார்” என தேனியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். என்றாலும் அரசு நிகழ்ச்சிகளில் ஒபிஎஸ், மகன் எம்பி ரவீந்திரநாத் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கு கொடுக்கும் முக்கியத்துவம் திமுகவினருக்கு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது. பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், கம்பம் சட்டமன்ற உறுப்பினரும், மா.செ.வுமான ராமகிருஷ்ணன், ஆகிய இருவரும் அதிமுக எம்பி உடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனர் என்ற சர்ச்சையும் உள்ளது.

தேனி வீரபாண்டிகௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப் படாத காரணத்தால் மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்துவிட்டார். 2 நாட்கள் திருவிழாவில் ராட்டினம் இயக்கப்படவில்லை. ராட்டினத்தை குத்தகைக்கு எடுத்திருந்தவர் அதிமுக பிரமுகர். இரண்டே நாளில் பிரச்சனையை சரிசெய்து மாவட்ட ஆட்சித்தலைவர், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகராஜன், ஒன்றிய செயலாளர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ராட்டினமும் மீண்டும் இயக்கப்பட்டது.

போடி சட்டமன்றத் தொகுதியில் ஓபிஎஸ் எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் தங்கதமிழ்செல்வன். தேனி மாவட்ட திமுக நிர்வாகத்தை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்து தனக்கு வேண்டப்பட்ட அதிமுகவிலிருந்தும் அமமுகவிலிருந்து வந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு பதவிகளை வழங்கி வருகிறார். இதனால் நீண்டகாலமாக திமுகவில் உள்ள நிர்வாகிகள் பதவி இல்லாமல் உறுப்பினர்களாகவே நிலவி வரும் நிலை உள்ளது. மேலும் பதவி தருகிறேன் என்று பலரிடமும் வசூல் செய்து வருவதாகவும் புகார் கூறப்படுகிறது. நீண்ட காலமாக மாவட்ட செயலாளராக இருந்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு மாற்றப்பட்ட மூக்கையா, மாவட்ட பொறுப்பாளராக இருந்த கம்பம் ஜெயக்குமார், அதிமுக ஆட்சிக்காலத்தில் அக்கட்சியினருடன் மிகவும் நெருக்கம் காட்டி வந்த திமுக ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்ட திமுகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அனைவருமே முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

திமுகவின் உண்மை விசுவாசிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் அரசியல் செய்த காரணத்தால் ஒன்றிய செயலாளர் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் கே.என்.நேரு மூலமாக ஒன்றியச் செயலாளர் பதவியை பெற்றவர் ரத்தின சபாபதி. போடி முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன் ஆகியோர் முக்குலத்தோர் ஆதிக்கத்தால் அரசியல் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. புகார் கூறப்படுகிறது. நீண்ட காலமாக மாவட்ட செயலாளராக இருந்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு மாற்றப்பட்ட மூக்கையா, மாவட்ட பொறுப்பாளராக இருந்த கம்பம் ஜெயக்குமார், அதிமுக ஆட்சிக்காலத்தில் அக்கட்சியினருடன் மிகவும் நெருக்கம் காட்டி வந்த திமுக ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்ட திமுகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அனைவருமே முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

திமுகவின் உண்மை விசுவாசிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் அரசியல் செய்த காரணத்தால் ஒன்றிய செயலாளர் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் கே.என்.நேரு மூலமாக ஒன்றியச் செயலாளர் பதவியை பெற்றவர் ரத்தின சபாபதி. போடி முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன் ஆகியோர் முக்குலத்தோர் ஆதிக்கத்தால் அரசியல் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

-ஜெயபால்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.