எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து களம் காணப்போகும் அந்த வேட்பாளர் யார் ?
சேலம் எடப்பாடி எப்போதுமே அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது. இதுவரை திமுக இரண்டுமுறை மட்டுமே இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அதிமுக 7 வெற்றிகளோடு முதலிடம் வகிக்கிறது. வன்னியர் சமூகத்தினர் அடர்த்தியாக வசிக்கும் இந்த பகுதியில், அவர்களின் ஓட்டுக்களை அறுவடை செய்யப்போகும் நபர் யார் என்பதிலிருந்துதான், குறிப்பிட்ட கட்சியின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு செல்வகணபதியின் செயல்பாடுகளும் இல்லை என்பது ஒருபுறமிருக்க; எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது சொந்த மாவட்டத்தில் அவரை எதிர்த்து களமிறக்க வகையான நபர் தேவை என்பதை உணர்ந்து சில ஆண்டுகளாகவே தேடுதல் வேட்டை நடந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள்.
அந்த வேட்டையில் அடையாளம் காணப்பட்ட பார்த்திபன் முதலிடத்தை பிடித்திருப்பதாக சொல்கிறார்கள். தே.மு.தி.க. கட்சியிலிருந்து திமுகவிற்கு வந்திருந்தாலும், ஏரியாவில் வன்னியர் சமூகத்து வாக்குகளை கொத்தாக அள்ளுவதற்கு அவர் ஒருவர்தான் சரியான தேர்வு என்பதாக தலைமைக்கு பரிந்துரைத்திருக்கிறாராம் செல்வகணபதி.
சேலம் எடப்பாடி தொகுதியின் தற்போதையை நிலை, எடப்பாடி பழனிச்சாமியை அவரது சொந்த மண்ணில் எதிர்த்து களம் காண இருக்கும் அந்த பார்த்திபனின் பின்புலம் குறித்து உரையாடுகிறது, அங்குசம் ஆடுகளம் பகுதியின் இந்த காணொளிப்பதிவு.
வீடியோவை முழுமையான காண
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து களம் காணப்போகும் அந்த வேட்பாளர் யார் ?
— அங்குசம் சிறப்பு செய்தியாளர் குழு.