அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

யார் இந்த அபின் தினேஷ் மோதக்…?

திருச்சியில் அடகு நகையை விற்க

சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப் பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் அதிகாரியை மாற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அபின் தினேஷ் மோதக் காவல் துறையில் மெச்சத்தக்க பணிகளை செய்ததற்காக கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியிடம் இருந்து விருது பெற்றவர் ஆவார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

சென்னை மாநகர காவல் ஆணையராக கடந்த 2024 ஆண்டு ஜூலை முதல் பதவி வகித்து வந்த அருண் ஐபிஎஸ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைமை செயலாளர் முருகானந்தத்தை மாற்றிய தேர்தல் ஆணையம் புதிய டிஜிபியையும் நியமனம் செய்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையின் புதிய கமிஷனர்..!
                                                   சென்னையின் புதிய கமிஷனர்..!

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

புதிய கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ள அபின் தினேஷ் மோதக் 1997 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். சிபிஐ மற்றும் என்.ஐ.ஏ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளில் பணியாற்றிய அனுபவமும் அபின் தினேஷ் மோதக்கிற்கு உள்ளது. மாநிலக் குற்றப் பதிவுத் துறையின் கூடுதல் காவல்துறைத் தலைவராகவும், பொருளாதாரக் குற்றப் பிரிவின் கூடுதல் காவல்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையராகவும் கடந்த 2024 ஆம் ஆண்டு பதவி வகித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில்தான், சென்னையில் உள்ள அமலாக்கப் பிரிவு சிஐடி-யின் கூடுதல் காவல்துறை இயக்குநராக (ADGP) நியமனம் செய்யப்பட்டு இருந்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த இவர், மெக்கானிக் என்ஜினியரிங் முடித்துள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றிய போது, பெரிய அளவிலான நிதி மோசடிகளை திறம்பட கண்டுபிடித்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து பெயர் பெற்றவர் அபின் தினேஷ் மோதக். தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட போது, ரவுடிகளுக்கு எதிராக பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை என்று தனக்கு கீழ் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவிப்பவர்களிடம் எவ்வித இரக்கமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார்.

காவல் துறையில் மெச்சத்தக்க பணிகளை செய்ததற்காக கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியிடம் இருந்து விருதும் பெற்றுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.