அமைச்சர் தொகுதியில் … அமைச்சரின் துறையிலேயே இப்படி ஒரு குற்றச்சாட்டா?
உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் சிரமம் இன்றி தங்குவதற்காகவே கட்டப்பட்டதுதான், யாத்ரி நிவாஸ் (Yatri Nivas Guest House) தங்கும் விடுதிகள். எழில்மிகு கொள்ளிடக்கரையோரம் அமைந்துள்ள இந்த விடுதிகள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்குகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மண்டலம் – 1, வார்டு – 4 இல் இடம்பெற்றுள்ள யாத்ரி நிவாஸ் மாநகராட்சிக்கு கட்ட வேண்டிய வரிபாக்கி மட்டுமே சுமார் 3 கோடியே 10 இலட்சத்திற்கு மேல் நிலுவையில் இருக்கிறதாம். இதனால், வரிப்பாக்கியை கட்டும் வரையில் குப்பைகளை அகற்றப்போவதில்லை என்றும்; குடிநீர் மற்றும் பாதாளசாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என்பதாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதாம்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் தொகுதியிலேயே, இப்படி ஒரு சம்பவமா? வரிப்பாக்கியை உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்துமா, இந்து அறநிலையத்துறை? பொதுமக்களிடம் வரியை கட்டுங்கள் இல்லை என்றால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமைகாட்டும் மாநகராட்சி அதிகாரிகள் யாத்ரி நிவாஸ் விவகாரத்திலும் உறுதியாக நின்று பாக்கியை வசூலிப்பார்களா?
– அங்குசம் புலனாய்வுக்குழு.





Comments are closed, but trackbacks and pingbacks are open.