சுரேஷ் ரவி & யோகிபாபு படத்தின் ஷூட்டிங் முடிந்தது!
பி.ஆர்.டாக்கீஸ் கார்ப்பரேஷன் பேனரில் பாஸ்கரன், ராஜபாண்டியன், பி. டேங்கி இணைந்து தயாரிக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படத்தை கே. பாலையா டைரக்ட் பண்ணுகிறார். சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில், கலக்கலான ஃபேமிலி எண்டர்டெயினராரக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடை ந்து போஸ்ட் புரொக்ஷன் வேலைகள் ஆரம்பமாகி யுள்ளன.
இதே தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’. இப்போது இரண்டாவது தயாரிப்பாக, இந்த புதிய படத்தை முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாக்கி வருகிறது.
இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் கலந்து கலக்கலான காமெடி டிராமாவாக இப்படத்தினை இயக்குநர் கே. பாலையா எழுதி இயக்குகிறார. சுரேஷ் ரவி, யோகிபாபு ஆகியோருடன் தீபா பாலு, பிரிகிடா சாகா, தேஜா வெங்கடேஷ் , கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு, மதுரை, இராமநதபுரம், தேனி, சென்னை பகுதிகளில், 45 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
விரைவில் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
*தொழில் நுட்பக் குழு*
ஒளிப்பதிவு:கோபி ஜெகதீஸ்வரன்
இசை: என்.ஆர். ரகுநந்தன்
படத்தொகுப்பு : தினேஷ் போனுராஜ்
கலை : சி.எஸ். பாலச்சந்தர், பி.ஆர்.ஓ.: சதீஷ் (AIM)
— ஜெடிஆர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.