அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சேரன் & விக்னேஷ் சிவன் ரிலீஸ் பண்ணிய ‘ரோஜா, மல்லி, கனகாம்பரம்’ ஃபர்ஸ்ட் லுக்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘புதிய கீதை’, ‘கோடம்பாக் கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களின் இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் ‘ரோஜா, மல்லி, கனகாம்பரம்’  படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

படத்தை பற்றி இயக்குனர் கே. பி. ஜெகன்,

“படத்தில் மூன்று கதைகள் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது தான் திரைக்கதையின் சுவாரஸ்யம். ஒவ்வொரு கதைக் களத்திற்கும், ஒரு பாடல் என்ற விதத்தில் மூன்று பாடல்களும், மூன்று கதைகளையும் இணைக்கும் இடத்தில் நான்காவதாக ஒரு பாடலும் இடம் பெறுகிறது. பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் முக்கியத்து வம் நிறைந்த படமாக இது இருக்கும்.

யாவரும் கேளீர்

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற  விஜய் வர்மா ஒரு ஹீரோ. இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடிக்கிறார். இவர் ‘வடம்’ படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். மூன்று கதைகளில் ஒரு கதையில் இவர்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு, திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குலசேகரபட்டணம் ஆகிய இடங்களில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை யில் நவம்பர் மாதத்தில் நிறைவு பெறும்.

மெகா ஹிட் படமான ‘மாயாண்டி குடும்பத்தார்’  படத்தை தயாரித்த யுனைடெட் நிறுவனம், தனது இரண்டாவது படைப்பாக இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறது” என்கிறார். ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்.

*படக்குழு*

தயாரிப்பு : ‘யுனைடெட் ஆர்ட்ஸ்’ எஸ். கே. செல்வகுமார்

எழுத்து & இயக்கம் – கே. பி. ஜெகன்

ஒளிப்பதிவு : சுகசெல்வம்,

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இசை: ஸ்ரீகாந்த் தேவா,

எடிட்டிங் : மணிகண்டன் சிவகுமார்,

ஆர்ட் டைரக்டர்:வீரசமர்,

பாடல்கள்: கார்த்திக் நேத்தா,

திரை வண்ணன், சக்தி (USA)

நடனம்: ரிஷி

காஸ்ட்யூம் டிசைனர்: கே. நடராஜ்,

தயாரிப்பு நிர்வாகி: பாஸ்கர்,

தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : ராமதாஸ்,

நிர்வாக தயாரிப்பாளர் – சாமுவேல் சிவராஜ்,

பி.ஆர்.ஓ.:  யுவராஜ்

 

 —    ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.