எந்த ஒரு நடிகையும் இந்தளவு ரசிகர்களை ரசித்தது இல்லை !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கன்னட நடிகை ரச்சிதா ராம் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்திருக்கிறார். அப்போது ஒரு ரசிகர் ஆர்வ மிகுதியில் ரச்சிதாவின் கன்னத்தை பிடித்து செல்லம் கொஞ்சி விட்டு சென்று விட்டார். முதலில் ஷாக் ஆன ரச்சிதா பிறகு இயல்பாக அந்த நொடியை கடந்து போனார். அதன் பிறகு இன்னொரு ரசிகரும் அதே போல செய்ய, செல்லமாக கடிந்து கொண்டார். இந்த ரீல்ஸ் வைரல் ஆனது.

பிரஸ் மீட்டில் இந்த கேள்வி கேட்கப்படும் அளவுக்கு வைரல் ஆனது. ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்கள். தவறான நோக்கத்தில் தொட்டிருந்தால் நானே கண்டித்திருப்பேன். இதை பெரிது படுத்தவேண்டியதில்லை என்று கடந்து சென்று விட்டார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

ரச்சிதா ராம்
ரச்சிதா ராம்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ரச்சிதாவின் வீடியோவை ஷேர் செய்து, ஒரு முறைக்கு இருமுறை ஜொள்ளு விட்டு பார்த்ததால், அல்காரிதம் படி ரச்சிதாவின் மற்ற ரீல்களையும், இந்தா பாரு என்று தள்ளி விட்டான் மார்க்கான். கரும்பு தின்னக் கூலியா என்று மற்ற ரீல்ஸ்களையும் பார்த்தேன். உங்களுக்கு ஸ்டோரி கொண்டு வருவதற்கு எப்படியெல்லாம் தியாகம் செய்கிறேன் என்று பாருங்கள் மக்களே.

பலமுறை ரசிகர்களை சந்தித்திருக்கிறார் ரச்சிதா. அவருக்கு பிறந்த நாள் என்பதால் ஸ்பெஷல் சந்திப்பு. ரசிகர்களிடம் மிக அன்னியோன்யமாக பழகுகிறார். ரசிகர்கள் போட்டோ எடுக்கும் போது சர்வ சாதாரணமாக தோளில் கை போடுகிறார். ரசிகர்களுக்கு கை கொடுக்கிறார். சில ரசிகர்கள் போட்டோ எடுக்க தெரியாமல் தடுமாறினால், தோளில் தட்டி, இவரே போனை வாங்கி போட்டோ எடுத்துக் கொடுக்கிறார். ஒரு ரசிகர் சாக்லேட் கொண்டு வந்து கொடுக்க, அதை ரசிகருக்கே ஊட்டி விடுகிறார். இன்னொரு ரசிகர் அவர் கையைப் பிடித்து முத்தம் கொடுத்து விட்டு போனார். அதையும் ரசித்தார். மற்றொரு ரசிகர் கவிதை சொல்லியே தீருவேன் என்று அடம்பிடிக்க, ஜாலியாக அதை ரசிக்கிறார். பெண்கள் அவருக்கு திருஷ்ட்டி கழிக்கும் போது பக்தி சிரத்தையாக அதை ஏற்றுக்கொள்கிறார்.

எந்த ஒரு நடிகையும் இந்தளவு ரசிகர்களுடன் நெருக்கமாக இருந்து பார்த்ததில்லை. அதை தவறு என்று சொல்ல முடியாது. யார் எந்த நேரத்தில் எப்படி பிஹேவ் செய்வார்கள் என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முடியாது. எனவே பொதுவெளியில் நடிகைகள் ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் செய்வது நல்லது தான்.

ஆனால், ரச்சிதா இந்த தடைகளை எல்லாம் உடைத்திருக்கிறார். அவ்வளவு இயல்பாக ரசிகர்களுடன் பேசுகிறார். பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.  ரசிகர் கன்னத்தை கிள்ளியதும் ஒரு நொடியில் கோபத்தையும், ஆச்சரியத்தையும் காண்பித்து, அடுத்த நொடியில் சிறிது கடந்த அந்த ரீல்ஸ் வைரலானதில் ஆச்சரியமில்லை. சமீபத்தில் ஜெ.நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.