அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சீனியர் நடிகரிடம்  ஜூனியர் டைரக்டர் போட்ட “பிட்”

திருச்சியில் அடகு நகையை விற்க

‘ஜென் ஸ்டுடியோஸ்’ பேனரில் புகழ் & ஈடன் இணைந்து தயாரித்து, வரும் 27-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகவுள்ள படம் ‘நீ ஃபார் எவெர்’. டேட்டிங் ஆப் கலாச்சாரத்தில் மூழ்கிக்கிடக்கும் இன்றைய இளசுகளின் வாழ்க்கையைச் சொல்லும் இப்படத்தை அசோக்குமார் கலைவாணி என்ற இளைஞர் டைரக்ட் பண்ணியுள்ளார். இதில் நாளைய இயக்குனர் 6-ஆவது சீசன்  டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் ஹீரோவாக அறிமுகமாகிறார். மிஸ் தென்னிந்தியா பட்டம் வென்ற கேரளாவின் அர்ச்சனா ரவி ஹீரோயினாகவும் மற்ற கேரக்டர்களில் ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, பிருந்தா, ரெத்திகா, ஸ்ரீனிவாஸ், செல்லா, டாக்டர்.வித்யா, சினேகா சக்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.

நீ ஃபார் எவெர்ஒளிப்பதிவு : ராஜா பட்டாசார்ஜி, இசை : அஸ்வின் ஹேமந்த், எடிட்டிங் : எஸ்.ஏ.நாகராஜன், ஆர்ட் டைரக்டர் : வர்ணாலயா ஜெகதீசன், நடனம் : விஜயராணி, காஸ்ட்யூம் டிசைனர் : சிந்துஜா அசோக், பி.ஆர்.ஓ. :சதீஷ் & சிவா [ எய்ம் ].

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

‘நீ ஃபார் எவெர்’ ரிலீசாக இன்னும் எட்டு நாட்களே இருப்பதால் படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் மார்ச். 18-ஆம் தேதி மதியம் நடந்தது.

இதில் பேசியவர்கள்….

முதல்வர் பிறந்தநாள்

தயாரிப்பாளர் புகழ், “நான் எப்போதும் நம்புவது நல்ல எண்ணம் இருந்தால் நல்ல விஷயம் நடக்கும் என்பதைத் தான். இந்தப் படம் அதற்கு உதாரணம். நாங்கள் தயாரித்து  போன வருசம் ரிலீசான ’தருணம்’ படத்தின் நட்டத்தால் இந்தப் படத்தை நிறுத்த வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் நாங்கள் வைத்த நம்பிக்கை, டைரக்டர் அசோக்குமாரின் முயற்சி, படக்குழுவினரின் கடும் உழைப்பால் இப்போது ரிலீசாகும் கட்டத்திற்கு வந்துள்ளது. சீனியர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் சார் பெரும் ஆதரவாக இருந்தார். படத்தில் நடித்த-உழைத்த அனைவருக்கும், இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மீடியாக்களுக்கும் நன்றி”.

அர்ச்சனா ரவி
அர்ச்சனா ரவி

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஹீரோயின் அர்ச்சனா ரவி, மியூசிக் டைரக்டர் அஸ்வின் ஹேமந்த், டான்ஸ் மாஸ்டர் விஜயராணி, எடிட்டர் நாகராஜன், நடிகைகள் சினேகா சக்தி, டாக்டர். வித்யா, நடிகர்கள் பிரதோஷ், ஹரிபாஸ்கர் என பேசிய எல்லோருமே வழக்கம் போல் தயாரிப்பாளருக்கும் டைரக்டருக்கும் நன்றி சொன்னதுடன் இப்படம் இளைஞர்களுக்குத் தான் என்றாலும் எல்லாருக்கும் பிடிக்கும் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டனர்.

ஹீரோ சுதர்ஷன் கோவிந்த், “நாம் செய்யும் வேலையில் நேர்மையும் அர்ப்பணிப்பும் இருந்தால் நமக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு கிடைக்கும், நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும் என்பதற்கு சாட்சி தான் எனக்கு கிடைத்த இந்தப் பட வாய்ப்பும் நல்ல விஷயமும்”.

தயாரிப்பாளர் தனஞ்செயன்[ சிறப்பு விருந்தினர்] “சினிமாவை நேசிக்கும் ஒரு மனிதராக புகழ் இருப்பதால் தான் பல கஷ்டங்களுக்கிடையேயும் இப்படத்தை தயாரித்து ரிலீசுக்கு கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பட ரிலீசுக்கு முன்பே வாங்கிருக்குன்னா படத்தின் குவாலிட்டிக்காகத் தான். நானும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். படம் செம குவாலிட்டியாக இருக்கு. மீடியா நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு கொடுத்து தயாரிப்பாளர் புகழ் லாபம் சம்பாரிக்க உதவ வேண்டும்”.

சுதர்ஷன் கோவிந்த், அசோக்குமார் கலைவாணி , புகழ்
சுதர்ஷன் கோவிந்த், அசோக்குமார் கலைவாணி , புகழ்

ஒய்.ஜி.மகேந்திரன், “டைரக்டர் அசோக்குமார் கலைவாணி என்னிடம் கதை சொல்லி முடித்ததுமே நடிக்கிறீங்களா சார்னு கேட்கல. நீங்க நடிக்கிறீங்கன்னு சொன்னார். அந்த கான்ஃபினெட் தான் என்னை இந்தப் படத்துல நடிக்க வச்சது. இளமையும் முதுமையும் புதுமையும் கலந்த கதை இது. படத்தின் ஷூட்டிங் பொள்ளாச்சியில் ஒரு வீட்டில் நடந்த போது, இந்த சேர்ல தான் சார் நடிகர்திலகம் சிவாஜி உட்கார்ந்தார்னு ஒரு போடு போட்டு என்னை நடிக்க வச்சார் டைரக்டர். நடிகர்திலகம் உட்கார்ந்த சேர்னா சும்மாவா?”

தான் டைரக்டரான கதையை  சுவாரஸ்யமாகச் சொன்ன டைரக்டர் அசோக்குமார் கலைவாணி, “தயாரிப்பாளர் புகழ் சார் என்னை முழுமையாக நம்பினார்.அவரின் நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறேன். இந்தப் படம் ரசிகர்களை கண்டிப்பாக ஏமாற்றாது. அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்”. என்றார்.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.