சாதிய கணக்கீடு : சாதிக்குமா, அரசு?
தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கீட்டுப் பணியை தொடங்கும் என அறிவித்திருக்கிறார், முதல்வர் ஜோசப் விஜய். டாக்டர் கலைஞரும்; புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் பெருமுயற்சி எடுத்தும் சாதிவாரி கணக்கீட்டை முடிக்க முடியவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதி சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கும் அழைப்புவிடுத்து தாமே கோட்டையில் அமர்ந்து அனைத்து சாதித்தலைவர்களையும் நேரில் அழைத்து பேசி விவரம் கேட்டறிந்தார், எம்.ஜி.ஆர். சாதித் தலைவர்கள் தந்த அந்த சாதியினரின் எண்ணிக்கைகள் மொத்த ஜனத்தொகையை விட பல மடங்கு கூடுதலாக்கியது. எம்.ஜி.ஆர். அரண்டே போனார். அதை கிடப்பில் போடுங்கள் பின்பு பரிசீலிக்கலாம் என்றார்.

கலைஞரும், எம்.ஜி.ஆரும், கையில் எடுத்து மேற்கொண்ட இந்த பிரச்சனையை, விஜய் மேற்கொண்டு வந்திருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. ஆனால், பொறுமை வேண்டும்.
இந்தியாவில் தமிழகத்தை போல் எந்த மாநிலத்திலும் இவ்வளவு சாதிகள் இல்லை. ஒரு சாதியிலே பல்வேறு பிரிவு இருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் எந்த அரசும் சாதியை கணக்கெடுக்க முன் வரவில்லை.
சாதிய கணக்கீட்டுப்பணி சீர்திருத்தப்பணியாக, முன்னேற்ற பணியாக இருக்க வேண்டுமே அன்றி தாங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கிற எதற்காக வாழ்ந்து மடிந்தார்களோ அவர்களின் கொள்கைகளுக்கு மட்டும் முரணாக வராமல் காப்பது முதல்வரின் பொறுப்பு, கடமை.
மதுரை – P. அருணாச்சலம்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.