ஹௌரா எக்ஸ்பிரஸில் அதிரடி சோதனை: 11 கிலோ குட்கா பறிமுதல்!
திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையம் உயர்திரு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில், காவல்துறை கண்காணிப்பாளர் மேற்பார்வையில், திருச்சி வட்டக் காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் 19/08/26ம் தேதி சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் , முதல் நிலைக் காவலர் 517, மற்றும் காவலர் 950,1560 ஆகியோர் சகிதம் விழுப்புரம் இரயில் நிலையத்தில் இருந்து திருச்சி ரயில் நிலையம் வரை, வண்டி எண். 12665 ஹௌரா to கன்னியாகுமரி விரைவு வண்டியில் , தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா , குட்கா சோதனை செய்ததில் பின்புறம் உள்ள பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த சாம்பல் கலர் சாக்கு பையில் 11 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 19.08.2026 ஆம் தேதி காலை 03:00 மணிக்கு மேல் நடவடிக்கைக்காக திருச்சி ரயில்வே காவல் நிலையம் வந்து ஒப்படைக்கப்பட்டது.




Comments are closed, but trackbacks and pingbacks are open.