சமூக வலைத்தளங்களின் அட்மின்கள் மீது அதிரடி – டெல்டா காவல்துறை எச்சரிக்கை
புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் மூலம் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத ரீதியான இருவேறு சமூக பிரச்சனைகளை தூண்டும் வகையில் தவறான செய்திகளையும் பொய்யான செய்திகளையும் அதிகப்படியாக மிகைப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதும் பகிர்வதும் சட்டப்படியான குற்றம் என்று உண்மைக்குப் புறம்பான தவறான செய்திகளை பரப்புவோர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் (IT act-2000) கடுமையான சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அவ்வாறு செய்திகள் பரப்பப்படும் சமூக வலைத்தளத்தின் குழு நிர்வாகி மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை மூலம் அதிரடியாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
-ஜெ.கே..