கொள்ளையன் என்கவுண்டர் வழக்கு- விசாரணை ஏடிஎஸ்பி திடீர் மரணம்.

0

கொள்ளையன் என்கவுண்டர் வழக்கு- விசாரணை ஏடிஎஸ்பி திடீர் மரணம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொலை கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி என்கவுண்டர் விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக இருந்த ஏடிஎஸ்பி முருகேசன் மாரடைப்பால் மரணம்.

https://businesstrichy.com/the-royal-mahal/

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சமீபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் நகைக்கடை உரிமையாளரின் வீட்டிற்குள் புகுந்து மனைவி மற்றும் மகனை கழுத்தறுத்து கொன்றதுடன் வீட்டிலுள்ள பணம் நகை போன்ற பொருட்களை திருடி விட்டு சென்றது இதனை கண்ட அப்பகுதியினர் அந்த மர்ம கும்பலை வளைத்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீசார் Cr No : 130/21 U/S 353 , 332 , 307 IPC r/w 25(1) (a) வழக்கு பதிவு செய்தனர்.

அதன்மூலம் ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பல் என்றும் அதில் மகி பால்சிங் வயது 28 எனும் குற்றவாளி மட்டும் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த போது பாதுகாப்பில் இருந்த போலீசார் தப்பியோடிய குற்றவாளியை என்கவுண்டரில் சுட்டனர். இதில் சுடப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் மகி பால்சிங்
உடலை சீர்காழி GH பரிசோதனை கூடத்தில் மயிலாடுதுறை விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் G. அமிர்தம் முன்னிலையில் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமணை துறைத்தலைவர் Dr.நவீன் மற்றும் Dr.சிவகுமார் பேராசிரியர் ஆகியோர் 12.45 முதல் 16.10 மணி வரை பிரேத பரிசோதனை செய்தும், பிரேதத்தை இறந்த நபரின் சித்தப்பா லக்ஸ்சிங் வயது 36 என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதன்மூலம்
பிரேதத்தை சென்னை வரை அரசு Ambulance TN 20 G 2617 மூலமாகவும் அங்கிருந்து விமானம் மூலம் ராஜஸ்தான் கொண்டு செல்வதாக முடிவு செய்யப்பட்டு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி திரிபாதி சிறப்பாக செயல்பட்ட மயிலாடுதுறை காவல்துறை அதிகாரிகளை பாராட்டினர்.

இந்நிலையில் இவ்வழக்கினை சிறப்பாக ஆராய்ந்து செய்து முடித்த ஏடிஎஸ்பி முருகேசன் இன்று 30/1/2021 அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டு வீடு திரும்பும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த அதிர்ச்சி சம்பவம் மயிலாடுதுறை காவல்துறை வட்டாரங்களில் மட்டுமல்லாது தமிழ்நாடு காவல் துறையினர் இடையே பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.

ஜெ.கே..

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.