ரூ.5 லட்சம் கடன் வேண்டுமா? மோசடி விளம்பரம் ஆசை காட்டியதால் மோசம் போன திருச்சி மக்கள்

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

ரூ.5 லட்சம் கடன் வேண்டுமா? மோசடி விளம்பரம் ஆசை காட்டியதால் மோசம் போன திருச்சி மக்கள்

என்ன செய்தால் பணம் சம்பாதிக்கலாம். எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி..? உழைக்காமல் பணம் சம்பாதிப்பது எப்படி..? குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாவது எப்படி..? என பலவாறாக ரூம் போட்டு யோசிக்கும் மனிதர்களையும் நம் கடன் பிரச்சனையிலிருந்து மீள்வது எப்படி.? என புலம்புகிறவர்களை இனம் கண்டு, உங்களுக்கு தீர்வாக “நாங்கள் இருக்கிறோம்” என அழைத்து எளிதாக ஏமாற்றும் வித்தைக்காரர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள். அப்படி ஒரு வித்தைக்காரன் தான் சமீபத்தில், திருச்சியில் தன் கைவரிசையை காட்டி இருக்கிறான்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனங்கள் மூலம் செய்தித்தாள் மற்றும் உள்ளுர் தொலைக்காட்சிகளில் ஹிந்துஸ்தான் பைனான்ஸ் (பி) லிமிடெட் என்ற பெயரில் ஒரு விளம்பரம் வெளியாகிறது. அந்த விளம்பரத்தில்,
“உடனடி தனி நபர் கடன் வேண்டுமா, ஆதார் கார்டு, பான் கார்டு மட்டும் இருந்தாலே போதும்.. ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை தரப்படும், கடன், வீடு கட்ட கடன், வீட்டின் பெயரில் அடமான கடன், வீட்டை விரிவாக்கக் கடன், வேறு வங்கிகள் மற்றும் தனியார் பைனான்ஸ் நிறுவனங்களில் உள்ள கடன்களை மீட்டு குறைந்த வட்டியில் அதிக கடன் பெற அனுகவும், More Info 96295 09225 என உள்ளது.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

அடடா.. ஆபத்பாந்தவனாக வந்திருக்கிறான், இனி நம் கவலையெல்லாம் தீர்ந்தது என்ற எண்ணத்துடன் அந்நிறுவனத்தை அணுகியிருக்கிறார்கள் அப்பாவிகள். விட்டில் பூச்சி போல் வந்து விழுந்த அந்த அப்பாவி மக்களிடம் தேவையான விபரங்களை.. அதான் பான் கார்டு, ஆதார்டு கார்டு போன்றவற்றின் நகல்களை வாங்கிக் கொண்டு, “எவ்வளவு பணம் வேண்டும்” என கேட்டு, குறித்துக் கொண்டு அனுப்பியிருக்கிறார்கள்.

3

பிறகு அவர்கள் கேட்ட கடன் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டதாக (Sanction) ஒரு குறுஞ்செய்தி அவர்களது செல்போனிற்கு வருகிறது. பணம் கைக்கு வந்துவிடும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த மக்களை தொடர்பு கொண்டு, “நீங்கள் கேட்டிருந்த பைனான்ஸ் கடன் தொகை உறுதி செய்யப்பட்டு விட்டது. அதற்கு முன் நீங்கள் இன்சூரன்ஸ் தொகையாக ரூ.10,000 கட்ட வேண்டும்” என கூறியிருக்கிறார்கள். அடடா… பணம் கைக்கு வரப் போகிறது.

கடன் தொல்லை தீர்ந்தது என்ற எண்ணத்துடன் ரூ.10,000த்தை (அதையும் கடன் வாங்கித் தான்) கட்டியிருக்கிறார்கள். தங்கள் வங்கிக் கணக்கில் பணம் விழுந்துவிட்டதா என தினமும் பார்த்திருக்கிறார்கள். நாட்கள் கடந்து விட்டது. ஒரு ரூபாய் கூட விழவில்லை. இதையடுத்து More Info 96295 09225 என்ற அந்த எண்ணை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். மறுமுனையில், “நீங்கள் டயல் செய்த எண் தவறானது.. உபயோகத்தில் இல்லை, ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது” என மாறி மாறி வந்திருக்கிறது. இப்போது தான் அந்த அப்பாவி மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார்கள்.

4

ரூ.10,000 இன்சூரன்ஸ் தொகை தர முடியாதவர்கள், “நீங்கள் கொடுக்கும் அந்த கடன் தொகையில் கழித்துக் கொள்ளுங்கள்” என அப்பாவியாய் கூறியிருக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை..(?). “இன்சூரன்ஸ் தொகையை கட்டினால் மட்டுமே கடன் ரீலிஸாகும்” என உறுதியாக தெரிவித்துவிட்டனர். இதனால். “பணம் கிடைக்கவில்லையே” என கவலையடைந்தவர்கள் தப்பித்திருக்கிறார்கள்.

அந்த விளம்பரத்தில் மேலும் ஒரு சுவாரஸ்யம். ஆட்கள் தேவை.. ஆண்கள், பெண்கள் +2 முதல் Any Degree, hindustanfinance74@gmail.com. என்ற வாசகம் உள்ளது. என்ன பதவிக்கு, வேலைக்கு என்றெல்லாம் இல்லை. அவர்கள் மூலம் சில அப்பாவிகள் அந்நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அப்படி அழைத்துச் சென்றவர்கள், தங்கள் கஸ்டமர்களுக்கு பயந்து அவர்கள் செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்து விட்டார்கள்.

மக்களின் ஏழ்மையையும், அறியாமையையும் பயன்படுத்திக் கொள்ளும் போலி நிறுவனங்கள் சமூகத்தில் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன. போலிகள் குறித்து ஏராளமான செய்திகள் வந்தாலும் ஏமாறுபவர்கள், சரியாக ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இப்போது அந்த நிறுவனம் குறித்து காவல்துறையில் புகார் அளித்து தாங்கள் கொடுத்து பத்தாயிரமாவது திரும்ப கிடைக்குமா என பரிதாபத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

– இப்ராகிம்

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.