திமுகவின் பீ டீம் தான் சசிகலா – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி
சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா இன்று சென்னைக்கு அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் வேளையில், சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியது ; அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதிமுகவிற்கும் சசிகலாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, மேலும் சசிகலாவை அதிமுக வின் பொதுக்குழு கூடி கட்சியில் இருந்து நீக்கியுள்ளது இப்படியிருக்க அதிமுகவின் கொடியை பயன்படுத்த எவ்வித உரிமையும் கிடையாது. ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அதிமுக செயல்பட்டு வருகிறது.
மேலும் அதிமுக, சசிகலா விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கைகளை மட்டுமே செய்து வருகிறது. சசிகலா வெளியே வருவதால் பாதிக்கப்படுவது அதிமுக அல்ல தினகரன் தான். அதுமட்டுமல்லாது அதிமுகவில் அதுமட்டுமல்லாது அதிமுகவில் எந்த ஸ்லீப்பர் செல்லும் இல்லை. சில எட்டப்பன்கள் தான் உள்ளனர் என்று கூறினார்.
இந்த நிலையைப் பயன்படுத்தி சசிகலாவை திமுக ஆதரிக்கிறது. திமுகவின் பீ டீம் தான் சசிகலா என்று செய்தியாளர்கள் மத்தியில் கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.