திருச்சி ரயில்வே எல்லையில் நள்ளிரவில் சிக்கிய 4 கொள்ளையர்கள்…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி ரயில்வே எல்லையில் நள்ளிரவில் சிக்கிய 4 கொள்ளையர்கள்…

திருச்சி மத்திய ரயில் நிலைய எல்லை பகுதியில் நேற்று 26/4/2021 அன்று வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை திருச்சி மாநகர போலீசார் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

Sri Kumaran Mini HAll Trichy

திருச்சி மாநகர மூளை பகுதியான கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரிஸ்டோ பாலம் அருகே கார் டிரைவர் ஒருவரிடம் நான்கு பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு தனது கைவரிசையை காட்டியுள்ளனர். இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாருக்கு இரவு 9.30 மணி அளவில் தகவல் கிடைக்க சம்பவ இடத்திற்கு சென்ற மூத்த காவல் உதவி ஆய்வாளர் போத ராஜ் மற்றும் ஏட்டு திருமுருகன் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட அரியாவூர் சேதுராப்பட்டி பகுதியை சேர்ந்த ரெட் டாக்ஸி டிரைவரான சிவஞானம் போலீசாரை கண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதில் சிவஞானம் சிறுநீர் கழிப்பதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டு மறைவாக சென்றபோது அங்கு அடையாளம் தெரியாத நான்கைந்து பேர் சுற்றிவளைத்து அடித்து தன்னிடமிருந்த சவாரி சென்றுவிட்டு நான் வைத்திருந்த 2500 ரூபாய் பிடுங்கிக்கொண்டு என்னை விரட்டியடித்தனர் என்றுள்ளார்.

அதன்மூலம் எஸ்.எஸ்.ஐ போதராஜ் மற்றும் ஏட்டு திருமுருகன் அரிஸ்டோ பாலம் அருகே வண்டியை நிறுத்திவிட்டு சென்றபோது அப்போது பாலத்தின் கீழே ரயில்வே டிராக்கில் மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் நான்கு திசையிலும் தெறித்து ஓடியுள்ளனர். போலீசார் பிடிக்க முயற்சித்தபோது அதில் திருவரம்பூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெரு நடராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (வயது -28)எனும் நபர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி ஓடும்போது போலீஸ் பிடியில் சிக்கினார். இந்நிலையில் பிடிபட்ட வெங்கடேசனை கண்டோன்மெண்ட் போலீசார் அழைத்து விசாரித்தபோது தன்னுடன் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கூட்டாளிகளான சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் குளத்தூர்பட்டியை சேர்ந்த நாகராஜ் (வயது-28) மற்றும் திருச்சி கருமண்டபம் குளத்தங்கரை பகுதியை சேர்ந்த பாபு நாகமங்கலம் எம்ஜிஆர் நகரினை சேர்ந்த ஆறுமுகம் ( வயது 28) ஆகியோருடன் வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அதன்மூலம் போலீசார் இன்று 27/04/2021 காலை திருச்சி மத்திய ரயில் நிலைய வளாகத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நாகராஜ் பாபு ஆறுமுகம் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

மேலும் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து 1500 ரூபாய் மட்டும் மீட்கப்பட்டு வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டனர்..

மேலும் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரிக்க ஆரம்பித்தபோது..

மேற்கண்ட குற்றவாளிகளான நான்கு பேரும் திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் கொடிகட்டி திகழும் திருடர் குல திலகங்கள் என தெரியவந்தது ஏனென்றால் திருச்சி ரயில் நிலைய பகுதியில் நடக்கக்கூடிய செயின் திருட்டு பிக்பாக்கெட் பயணிகளின் உடமைகளை திருடுதல் போன்ற திருட்டு சம்பவங்கள் அனைத்திலும் 4 பேர் கொண்ட கும்பல் வெகுநாட்களாக செய்து வருவதாகவும், ரயில் நிலைய வளாகத்திற்குள்ளேயே இருந்துகொண்டு வரும் பயணிகளை நோட்டமிட்டு திசை திருப்பி உடமைகளை திருடுவது இவர்களது குல வழக்கமாக இருந்து வருகிறதாம். இதுகுறித்து ரயில்வே போலீசாரோ ரயில்வே பாதுகாப்பு படையினரோ தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ஒரு பெரிய கதையே இருக்குதாம் என்னவென்றால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளுக்கு தேவைப்படும்போது இதுபோன்ற நபர்களை பயன்படுத்தி கொள்வதாகவும் மேலும் ஒரு சில அதிகாரிகளுக்கு ஷேர் சென்று கொண்டிருப்பதாகவும் அதனாலே குற்றப்பிரிவு தனி படையினரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனராம் ஏனென்றால் இவர்களுக்கு அங்குள்ள ஒரு சில அதிகாரிகளை சிபாரிசு செய்துவருவதாக ஒரு உள்குத்து காலம் காலமாக இருந்து வருகிறதாக கூறுகின்றனர்.. எப்படி பார்த்தாலும் பயனடைவது அதிகாரி வட்டத்திலேயே இருப்பதால் விவரம் இல்லாத பொதுமக்கள் ஏமாந்து நிற்கின்றனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..

திருச்சி ரயில் நிலையத்தில் அதிகாரிகள் பக்க பலத்துடன் திருடர் குல திலகங்கள் திருடி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-ஜித்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.