திருச்சி வடமாநில ரயில்களில் தீவிர சோதனை சிக்கிய கஞ்சா- சரக்கு… அங்குசம் செய்தி எதிரொலி…
திருச்சி வடமாநில ரயில்களில் தீவிர சோதனை சிக்கிய கஞ்சா- சரக்கு… அங்குசம் செய்தி எதிரொலி…
கடந்த 31/5/2021 அன்று அங்குசம் செய்தி இணைய இதழில் வெளியிடப்பட்டிருந்த திருச்சியில் கொரோனா காலத்திலும் கட்டுக்கடங்காத சரக்கு கஞ்சா என்கிற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
*திருச்சியில் போலீசார் நடத்திய கஞ்சா வேட்டை.. அங்குசம் செய்தி எதிரொலி..*
திருச்சியில் போலீசார் நடத்திய கஞ்சா வேட்டை.. அங்குசம் செய்தி எதிரொலி..
அதில் கொரோனா முழு ஊரடங்கு காலகட்டத்தில் போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில் ரயில் மட்டும் இயங்கி வருவதால் திருச்சிக்கு வடமாநிலத்தில் இருந்து வரக்கூடிய ஹவுரா மைசூர் ரயில்களில் கஞ்சா மற்றும் சரக்கு எடுத்து வரப்படுகிறது. என்கின்ற தகவலை அங்குசம் செய்தி வெளியிட்டிருந்தது.
அதன்மூலம் திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் இன்று 05/06/2021 அதிகாலை திருச்சி ரயில் நிலையத்திற்கு வரக்கூடிய ஹவுரா மற்றும் மைசூர் ரயில்களில் பயணித்து வரக்கூடிய பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் சோதனை செய்தபோது.. அதில் திருச்சி பொன் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான தங்கராசு எனும் நபர் டிராவல் பேக் ஒன்றில் 30 சரக்கு பாட்டில்களுடன் மைசூர் ரயிலில் பயணித்த வந்தவரை ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் சோதனை செய்து பிடித்தனர்.
*திருச்சியில் கொரோனா காலத்திலும் கட்டுக்குள் அடங்காத சரக்கு -கஞ்சா..*
திருச்சியில் கொரோனா காலத்திலும் கட்டுக்குள் அடங்காத சரக்கு -கஞ்சா..
மேலும் இன்று 05/06/2021 காலை திருச்சி நோக்கி வந்த ஹவுரா ரயிலில் வந்த மர்ம நபர்கள் முதலாவது நடைமேடையில் போலீசார் சோதனையைக் கண்டு தாங்கள் எடுத்து வந்திருந்த மூன்று டிராவல் பேக்குகளையும் அதில் வைத்திருந்த 2 கிலோ அளவிலான 30 பண்டல்களை கொண்ட சுமார் 60 கிலோ கஞ்சாவை விட்டு விட்டு ஓடிச் சென்றனர். அதனடிப்படையில் நடைமேடை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளர் ஜவான் ஆகியோர் சம்பந்தப்பட்ட பொருட்களை கைப்பற்றி என்.ஐ.பி (போதைப்பொருள் தடுப்பு பிரிவு) தனி படையைச் சேர்ந்த டிஎஸ்பி காமராஜ் முன்னிலையில் காவல் ஆய்வாளர் கலைவாணிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து சம்பந்தப்பட்ட நபர்கள் யாரென்று சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.
–ஜித்தன்