திருச்சியில் கொரானா களப்பணியாளர்கள் சம்பள விவகாரம்..அதிரடி காட்டிய கலெக்டர்..

0

திருச்சியில் கொரானா களப்பணியாளர்கள் சம்பள விவகாரம்..அதிரடி காட்டிய கலெக்டர்..

திருச்சி முன்னாள் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஊரடங்கு காலங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் ரயில் மூலம் மட்டும் பயணிகள் வந்து கொண்டிருப்பதால், பொது மக்களை பாதுகாக்கும் வண்ணம் திருச்சி மத்திய ரயில் நிலையம், ஸ்ரீரங்கம், பொன்மலை, கோட்டை போன்ற 4 ரயில் நிலையங்களில் ஊரடங்கு காலங்களான தற்போது கொரானா பணியில் களப்பணியாளர்கள் சம்பளத்திற்கு ஈடுபடுத்தப்பட்டு பணியாற்றிட உத்தரவிட்டிருந்தார். அதன்மூலம் அவர்கள் ரயிலில் மூலம் வரும் பயணிகளை செக்கப் செய்து, சாணிடைசர் வழங்கி முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க எடுத்துரைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் சம்பளம் ஒரு குறையாக இருப்பதாக தகவல் சமூக வழிகளில் வெளியாகி வந்தது அதில் கொரானா தடுப்பு பணியில் ஈடுபடும் எங்களுக்கு சம்பளம் இல்லை என்று உயரதிகாரிகள் கூறுவதாகவும், சம்பளம் கேட்டால் தலைக்கு 500 ரூபாய் தங்களுக்கு கப்பம் கட்டினால் மட்டுமே சம்பள பதிவேட்டில் கையெழுத்து விடுவதாக கூறி இழுத்து அடித்து வருவதாக தகவல் வெளியானது.

அதனடிப்படையில் நேற்று 04/06/2021  அங்குசம் செய்தி இணைய இதழ் மூலம்

“திருச்சியில் கொரானா களப் பணியில் ஈடுபடும் எங்களுக்கு.. 500 வெட்டினா தான் சம்பளம்”..

 

திருச்சியில் கொரோனா “செக்கப்” ஈடுபடும் எங்களுக்கு… 500 “வெட்னா” தான் சம்பளம்…

என்கிற தலைப்பில் திருச்சி மாநகராட்சி ஆணையரின் கருத்து கேட்புடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இச்செய்தியை சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரியின் பார்வைக்கு  கொண்டு சென்றதுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கவனத்திற்கும் கொண்டு சென்றோம் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை  திருச்சி ரயில் நிலையங்களில் உடனடியாக ஆய்வு செய்யக்கோரி அதிரடி உத்தரவிட்டார் இந்நிலையில் நேற்று 04/06/2021 மாலை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.. மேலும் கொரானா பணியில் ஈடுபடுத்தப்பட்ட களப் பணியாளர்களுக்கு விரைவில் சம்பளம் வழங்கிடவும் உத்தரவிட்டனர்.

ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.