அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி ரயிலில் சிக்கிய கஞ்சா- காணாமல் போன 2 கஞ்சா சூட்கேஸ்..

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி ரயிலில் சிக்கிய கஞ்சா- காணாமல் போன 2 கஞ்சா சூட்கேஸ்..

கடந்த 31/5/2021 அன்று அங்குசம் செய்தி இணைய இதழில் வெளியிடப்பட்டிருந்த திருச்சியில் கொரோனா காலத்திலும் கட்டுக்கடங்காத சரக்கு கஞ்சா என்கிற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது அதில் கொரோனா முழு ஊரடங்கு காலகட்டத்தில் போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில் ரயில் மட்டும் இயங்கி வருவதால் திருச்சிக்கு வடமாநிலத்தில் இருந்து வரக்கூடிய ஹவுரா, மைசூர் ரயில்களில் கஞ்சா மற்றும் சரக்கு எடுத்து வரப்படுகிறது. என்கின்ற தகவலை அங்குசம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

அதன்மூலம் திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் கடந்த 05/06/2021 அதிகாலை திருச்சி ரயில் நிலையத்திற்கு வரக்கூடிய ஹவுரா மற்றும் மைசூர் ரயில்களில் பயணித்து வரக்கூடிய பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் சோதனை செய்தபோது..

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதில் திருச்சி நோக்கி வந்த ஹவுரா ரயிலில் வந்த மர்ம நபர்கள் முதலாவது நடைமேடையில் போலீசார் சோதனையைக் கண்டு தாங்கள் எடுத்து வந்திருந்த மூன்று டிராவல் பேக்குகளையும் அதில் வைத்திருந்த 2 கிலோ அளவிலான 30 பண்டல்களை கொண்ட சுமார் 60 கிலோ கஞ்சாவை விட்டு விட்டு ஓடிச் சென்றனர். அதனடிப்படையில் நடைமேடை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளர் ஜவான் ஆகியோர் சம்பந்தப்பட்ட பொருட்களை கைப்பற்றி என்.ஐ.பி (போதைப்பொருள் தடுப்பு பிரிவு) தனி படையைச் சேர்ந்த எஸ்பி காமராஜ் முன்னிலையில் காவல் ஆய்வாளர் கலைவாணிடம் ஒப்படைத்தனர்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து சம்பந்தப்பட்ட நபர்கள் யாரென்று சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வந்த நிலையில் சிசிடிவி காட்சியில் கஞ்சா எடுத்துவந்த நபர்கள்  குடும்பமாக வந்ததாகவும் அவர்கள் கையில் சூட்கேஸ் கொண்டு வந்ததும் அதில் 3 பெட்டிகள் பிடிப்பட்ட நிலையில் மீதமுள்ள 2 சூட்கேஸ் பெட்டிகளை காணவில்லை என்றும், மேலும் சம்பந்தப்பட்ட நபர்களே பெட்டிகளை எடுத்துச் சென்றார்களா அல்லது வேறு யாராவது கஞ்சா பெட்டிகளை எடுத்துச் சென்று விட்டனரா என்று என்.ஐ.பி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜித்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.