திருச்சியில் பிரபல கல்லூரி மாணவர்களை ஏமாற்றிய ஆன்லைன் மோசடி கும்பல்..
திருச்சியில் பிரபல கல்லூரி மாணவர்களை ஏமாற்றிய ஆன்லைன் மோசடி கும்பல்..
ஆசை யாரை தான் சும்மா விட்டது.. மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்ற மூன்று ஆசைகளில் காட்டும் அதிக மோகம், ஒன்று அவனை அழிவுக்கு கொண்டு செல்கிறது. இல்லையெனில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.. அதிலும் பணம் என்றால் பிணம் கூட வாய் திறக்கும் என்ற பழமொழிக்கு இணங்க மனிதன் பணத்தாசை பிடித்து ஒவ்வொரு நாளும் பித்து பிடித்தவர் போல் திரிகிறான். நேர்வழியில் சம்பாதிக்க ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கும் மனிதன் குறுக்கு வழியில் சம்பாதிக்க பல வழிகளை யோசித்து செல்வதால்தான் கடைசியில் எல்லாம் இழந்து ஏமாற்றம் கண்டடைகிறான்.. இது மனிதன் ஆகிய அனைவருக்கும் பொருந்தும்.. இருந்தாலும் இந்த காலகட்டத்தில் பணம்தானே ஒரு விஷயத்தை முடிவு செய்கிறது பணம் இல்லாமல் வாழ முடியுமா என்ற கேள்வி நம் அனைவரிடமும் இருந்து வருகிறது.. குறுக்கு வழிகளை மட்டும் போதிக்கும் நபர்கள் கொஞ்சம் சரியான வழிகளில் பல மடங்கு சம்பாதிக்கலாம் என்பதை காட்டினாலே பல குழப்பங்கள் தீர்வடையும்..
அந்த வகையில் குறுக்கு வழியில் பிசினஸ் செய்த சிட்பண்ட், பிட்காயின், போன்ற ஆன்லைன் சூதாட்டங்களில் அடுத்தகட்ட பரிமாணமாக கல்லூரி மாணவர்களை நோக்கி எழுந்து வருகிறது.. ஆன்லைன் சேர்ஷ் மார்க்கெட்டிங்.. இதன் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரபல கல்லூரி மாணவர்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்து ஏமாற்றம் கண்டுள்ளனர் என்கின்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் கண்களுக்குத் தெரிந்த 163 மாணவர்கள் இந்த ஆன்லைன் சேர்ஸ் மார்க்கெட்டிங் மூலம் பல லட்சம் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். அதிலும் திருச்சி பிரபல முப்பெரும் கல்லூரிகள் ஆன ஜெயில், ஜாலி, பியூட்டி கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் இடம்பெற்று இருப்பதுடன் மாணவர்களின் பெற்றோர்களே தனியாக அந்நிறுவனத்தில் பல லட்சம் பணம் முதலீடு செய்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எப்படி சிக்கினார்கள் இந்த மாணவர்கள்..
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ரோடு அடைய முத்து பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் அவரது மகளாகிய ஆனந்தி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த சையது ஹவுஸ் மகனாகிய சையது பாரூக், மற்றும் பாலகிருஷ்ணாபுரம் புதூர் ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் ஆகிய மூவரும் இணைந்து மதுரை காளவாசல் அருகில் பொன்மேனியில் FLY world shares Opc put Ltd, எனும் நிறுவனத்தை அமைத்து நடத்தி வந்துள்ளனர்.
அதன்மூலம் இணையதளம் மூலமாக ஆன்லைன் ஷேர்ஷ் மார்க்கெட்டிங் என்பதை ஆரம்பித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கல்லூரி மாணவர்களை கவரும் வண்ணம் ஆசையை தூண்டும் வண்ணம் சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை பரப்பி அதன் மூலம் பார்த்து வரக்கூடிய மாணவர்களை திருச்சி உள்ளிட்ட பிரபல நட்சத்திர ஹோட்டலில் மீட்டிங் வைத்து அவர்களை மூளைச்சலவை செய்து முதல் தவணையில் 50,000 செலுத்தச் சொல்லி அவர்களுக்கு லாபம் கிடைப்பது போல் இரண்டு அல்லது மூன்று முறை செய்து மேலும் இதேபோன்று லாபம் உங்களது நண்பர்களுக்கும் உங்களது நண்பர்களால் உங்களுக்கும் வரும் வகையில் செய்து கொள்ளலாம் என்கிற திட்டத்தை கூறி ஒவ்வொரு கல்லூரியில் உள்ள மாணவர்களை அவர்களது நண்பர்களை சேர்க்க செய்துள்ளனர்..
இதில் பாதிப்படைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலர் இன்று 9/06/2021 திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்க வந்துள்ளனர்.. அதில் புகார்தாரரான திருச்சி தென்னூர் காவல்கார தெரு பகுதியினை சேர்ந்த ஜெய கார்த்திகேயன் நான் என் மூலமாக எனது நண்பர்கள் மூலமாக சுமார் 163 பேர் கடந்த ஜூன் மாதத்திலிருந்து தொடங்கிய FLY world shares Opc pvt Ltd எனும் நிறுவனத்தில் சேர்த்திருந்தேன். அதன்மூலம் 28,67,500 ரூபாய் முதலீடு செய்திருந்தோம் அதற்கான ஊக்கத்தொகை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து சில மாதங்கள் மட்டுமே உங்களது வங்கி கணக்கிற்கு வந்தது. அதன் பின்னர் மேற்கண்ட நிறுவனத்தை நடத்தி வந்த மேற்படி மூவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது ஓரிரு வாரத்தில் உங்களுடைய ஊக்கத்தொகை வந்துவிடும் என்று கூறினார்கள் அதனால் நானும் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களது பேச்சை நம்பி காத்திருந்தோம்.
ஆனால் அவர்களிடத்திலிருந்து எந்தவித பதிலும் வரவில்லை நாங்கள் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்த பொழுது அவர்களது தொடர்பு எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அது எங்கள் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சி அளித்தது இது குறித்து நேரடியாக சென்று விசாரிக்க நாங்கள் மதுரைக்கு சென்ற பொழுது அவர்களது நிறுவனம் மூடப்பட்டு இருந்தது.
அதன் பிறகு இந்த நிறுவனத்தை நடத்தி வந்த மூவரும் எங்களை போன்றவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு நிறுவனத்தில் இணையதளம் மூலமாக பதிவு செய்ய வைத்து முதலீடு செய்து அனைத்து பணத்தையும் எடுத்துக்கொண்டு தலைமறைவானது தெரிய வந்தது மேற்கண்ட நிறுவனத்தை நடத்தி வந்த மூவரும் இந்த நிறுவனம் முறையாக பதிவு செய்த நிறுவனம் என்றும் எந்தவித கவலையும் பயமும் இல்லாமல் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம் என்றும் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் ஆன்லைன் மற்றும் ஏடிஎம் மையம் மூலமாக மட்டுமே என்று எங்களை திட்டமிட்டு ஏமாற்றி நம்ப வைத்ததுபோல இன்னும் பலரிடம் பணத்தை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்துள்ளார்கள் என்ற விஷயம் தெரிய வந்தது.
அவர்களை பற்றி விசாரித்ததில் இதுபோன்ற மோசடி செய்த பணத்தை வைத்து ஆடம்பரமான விலை உயர்ந்த BMW (பி.எம்.டபிள்யூ) கார் TN69BH0001 கவாஷ்கி நிஞ்ஜக போன்ற இருசக்கர வாகனங்கள் வாங்கியது தெரியவந்தது. மேலும் பாதிக்கப்பட்ட எங்களைப் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மதுரையில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்ததுமாய் இருக்கின்றனர். இதுகுறித்து காவல் ஆணையர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு எங்களது பணத்தை மீட்டு தர வேண்டி புகாரினை அளித்தனர்..
புகாரினை ஏற்ற காவல் ஆணையர் மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு இப்புகாரை ஏற்கும் படி உத்தரவிட்டார்.
–ஜித்தன், மெய்யறிவன்