திருச்சியில் 11 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம்..
திருச்சியில் 11 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம்..
திருச்சி மாநகர தில்லை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்னூர் பகுதியில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவருக்கு அவரது பெற்றோர்களே திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் ,சாந்தி இவர்களது 11 வயது மகளுக்கு தங்களது உறவினரான 21 வயது மதிக்கத்தக்க நபருக்கு திருமணம் செய்ததாக குழந்தைகள் பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற குழந்தை திருமண தடுப்பு அலுவலர் மற்றும் சைல்டுலைன்-1098 அமைப்பினர் சிறுமியை மீட்டு பாதுகாப்பு விடுதியில் கொண்டு சேர்த்தனர்.
ஜித்தன்