கற்பழிப்பு பழிக்குப்பழி திருச்சி ரவுடிக்கு நேர்ந்த கதி..

0

கற்பழிப்பு பழிக்குப்பழி திருச்சி ரவுடிக்கு நேர்ந்த கதி..

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த நவீன்குமார் எனும் நபர் கடந்த 6 தேதியிலிருந்து காணவில்லை என்று அவருடைய பெற்றோர் ஜூன் 8 தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை தொடங்கினர்.

கொலை செய்யப்பட்ட நவீன்குமார்

அதனடிப்படையில் நவீன் குமார் குறித்து போலீசார் விசாரிக்க ஆரம்பித்தது கடந்த சில நாட்களுக்கு முன்பு பரோலில் நவீன் குமார் வெளியே வந்ததாகவும், அவர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையம் உள்ளிட்ட திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பல்வேறு வழிப்பறி, அடிதடி தகராறு உள்ளிட்ட வருவதும் தெரியவந்தது.

மேலும் சம்பவத்தன்று ஜூன் 6 தேதி வீட்டிலிருந்து வெளியே கிளம்பியுள்ளார். அப்போது அவர் தனது நண்பர்களை சந்திக்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றதாக விசாரணையில் தெரியவர சம்பந்தப்பட்ட நண்பர்கள் யார் என்று போலீசார் வலையை விரிக்க.. அதில் நவீன் குமாரின் நெருங்கிய நண்பர்களான மம்மி என்கின்ற சந்துரு, கோயில்பிள்ளை, விஜயகுமார், மணிமாறன், டாங்கி என்கின்ற சங்கர் ஆகியோர் சிக்கினர். மேலும் அந்த 5 பேரும் இருக்கும் இடத்தை போலீசார் ரகசியமாக கண்டறிந்து பிடித்து விசாரித்தபோது.. நவீன் குமாரை நாங்கள் ஐந்து பேரும் கொலை செய்துவிட்டதாக பகீர் வாக்குமூலத்தை அளித்துள்ளனர்..

நவீன் குமார் ஐ கொலை செய்த கூட்டாளிகள்

நவீன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தபோது..

சம்பவத்தன்று ஜூன் 6ஆம் தேதி கோயில் பிள்ளை தனது மகள் சடங்கு நிகழ்வு தொடர்பாக ட்ரிங்க்ஸ் பார்ட்டி வைப்பதாக கூறி தனது கூட்டாளிகளை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் நெடுந்தெரு கொள்ளிடக்கரை அருகே அமர்ந்து காலையிலிருந்து இரவு வரை சரக்கு அடித்துள்ளனர். அப்போது கோயில் பிள்ளையிடம் இருந்த 15,000 பணத்தினை நவீன்குமார் கேட்டதாகவும் அப்போது ஆத்திரத்தில் நவீன் குமாரை முகத்தில் வேகமாக பொறி தெறிக்கும் அளவிற்கு கோயில்பிள்ளை கைகளால் குத்தியுள்ளார்.

மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது அண்ணன் மகளை நாசம் செய்தவன் தானே நீ என்று கூறி மீன் வியாபாரியான மம்மி என்கிற சந்துருவிடம் நவீனை கழுத்தறுத்து போடுமாறு கூறியுள்ளார். சக்க போதையில் இருந்த சந்துரு தனது இடுப்பில் வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியை வைத்து நவீன் கழுத்தை கிழித்துள்ளார்.

பின்னர் ரத்த வெள்ளத்தில் மிதந்த நவீன் குமாரை பார்த்து பயந்துபோன கூட்டாளிகள் இவனே இப்படியே விட்டுட்டு போனா நாம மாட்டிப்போம் அருகிலிருந்த காட்டு வேர்களை கொண்டு கழுத்தை நெரித்து கொன்று புதைத்ததாக கூறியுள்ளனர்.

அதன்அடிப்படையில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் நவீன் குமார் உடலை சம்பவ இடத்தில் இருந்து தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நவீன் குமாரிணை கூட்டாளிகள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

ஏற்கனவே பெண் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ரவுடி தனது கூட்டாளிகளினாலே கொல்லப்பட்ட சம்பவம் கோயில் நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.