திருச்சியில் கோடி பணம் கொள்ளையடித்த சாமி ரவி மருத்துவமனையில் அட்மிட்..
திருச்சியில் கோடி பணம் கொள்ளையடித்த சாமி ரவி மருத்துவமனையில் அட்மிட்..
திருச்சி தேர்தல் பணம் கொள்ளை அடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி சாமி ரவி திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.
திருச்சியில் தேர்தல் சமயத்தின் போது திருச்சி டு கரூர் சாலையில் பெட்டவாய்த்தலை அருகே பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி சாமி ரவியை சமீபத்தில் ராம்ஜிநகர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சாமி ரவி மீது இன்னும் பல கொலை,கொள்ளை, ஆட்கடத்தல் என்று வழக்குகள்,புகார்கள் ஆங்காங்கே எல தொடங்க.. ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சாமி ரவியை கஸ்டடியில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று 28/06/2021 மாலை திடீரென சாமி ரவி உடல்நிலை சரியில்லை என்று காரணத்தை கூறி திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஜி ஹெச் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் சாமி ரவிக்கு தனியறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒருபுறம் குண்டாஸ் வழக்கு தொடுக்க போலீசார் முயற்சி செய்து வர மற்றொருபுறம் சாமி ரவி சிறைக்கு செல்ல விருப்பமில்லாமல் தனது சமயோஜித புத்தியை பயன்படுத்தி வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
– ஜித்தன்