அங்குசம் சேனலில் இணைய

திருச்சி ரயில்வே எஸ்.ஐ- யிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி ரயில்வே எஸ்.ஐ- யிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது.

திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ- யாக பணிபுரிந்து வருபவர் ஆதித்யா, இவர் சமீபத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இரவு 2 மணி அளவில் அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் காரை இருட்டில் நிறுத்திக்கொண்டு ஐந்திற்கும் மேற்பட்ட மர்ம ஆசாமிகள் சந்தேகிக்கும் படியில் நின்றுள்ளனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இதனைக் கண்ட ஆதித்யா சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என்று அருகே சென்று பார்த்தபோது, கஞ்சா போதையில் இருந்த அந்த கும்பல் ஆதித்யாவை தாக்க முற்பட்டுள்ளனர்.

இதனால் சம்பவ இடத்திலிருந்து ஒதுங்கி வந்து ஆர்.பி.எஃப் அலுவலகம் வந்துள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அப்போது காரில் பின்தொடர்ந்து வந்த அந்த மர்ம கும்பல் ஆதித்யாவை வழிவிடும் முருகன் கோவில் அருகே மறைத்து பயங்கர ஆயுதங்களால் தாக்க முற்பட்டுள்ளனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதனால் சம்பவ இடத்தில் தனது இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அருகில் உள்ள ஆர்.பி.எப் அலுவலகத்திற்கு சென்று தகவல் தெரிவிக்க சென்றபோது அந்த கும்பல் எஸ்.ஐ ஆதித்யாவின் பைக்கை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்

சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று 23/07/2021 அன்று ரோஷன், பத்மநாபன் எனும் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை அதிதீவிரமாக போலீசார் தேடி வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

– இந்தர்ஜித்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.