அரசியல்வாதிகள் முதல் -ரவுடிகள், நடிகை என கிறங்கடித்த திருச்சி சாமியார் சிறையில் ! எக்ஸ்குளுசிவ் படங்கள் !
அரசியல்வாதிகள் முதல் -ரவுடிகள், நடிகை என கிறங்கடித்த திருச்சி சாமியார் சிறையில் ! எக்ஸ்குளுசிவ் படங்கள் !
திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் இவர் ஆட்டோ ஓட்டுனர். இவருடைய மகன் பாலசுப்பிரமணியன் (32). ‘தேஜஸ் சுவாமிகள்’ என்ற பெயரில் அந்த பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாகவும், ஜோதிடமும் சொல்லி வந்துள்ளார்.
அந்த பகுதியில் ஜாதகம் பார்க்க வந்த முன்னாள் திமுக துணைமேயர் அப்படியே அவரின் அரவணைப்பில் சாமியார் ஜோதிடராக வலம் வலம் வர ஆரம்பித்தார்.
இடையில் கோவில் நிர்வாகத்திற்கும் சாமியாருக்கும் இடையே பிரச்சனையில் அங்கிருந்து தன்னுடைய அம்மா ஊரான கேரளாவிற்கு சென்றார். கேரளாவில் அக்காவும் தம்பியும் சேர்ந்து தங்கி மாந்திரீகம் எல்லாம் கற்றுக்கொண்டு மீண்டும் திருச்சி மாவட்டம் அல்லித்துறை வன்னியம்மன் கோயில் பகுதியில் வசித்தபடி ஜாதகம் பார்த்து வருகிறார். முன்னாள் துணைமேயர் பழக்கத்தில் வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உட்பட முக்கிய நபர்கள் அதிகளவில் வந்து சென்றதால் குறுகிய காலத்தில் பிரபலமானார்.
சமீபத்தில் திருச்சியில் மசாஜ் ஸ்பா நடத்தி சர்ச்சையில் சிக்கிய முக்கிய புள்ளி ஒருவர் மூலம் நடிகர் விமல், நடிகை இனியா ஆகியோர் சாமியாரை சந்தித்து ஆசி வாங்கியுள்ளனர். நடிகர் விமல் ரெகுலர் பக்தராக மாறிவிட்டார்.
திருச்சியில் மசாஜ் ஸ்பா நடத்தும் ராம்ஜிநகர் கும்பல் பின்னணியில் ரவுடிகள் இருப்பதால் அவர்களும் சாமியாரிடம் தஞ்சம் அடைந்து கடைசியில் அவருக்கு பாதுகாப்பு பணியிலும் ஈடுபட ஆரம்பித்தால். சாமியார் – அரசியல்வாதிகள் – நடிகர் – நடிகை – ரவுடிகள் என பிரபலமான நேரத்தில் தன்னிடம் ஆசீர்வாதம் பெற வரும் பிரமுகர்களை படம் பிடித்து முகநூலில் அவர் புகழ் பரப்பி வந்த நிலையில் தான் அந்த சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியாகி அவருக்கு சிக்கலாகி தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.