போலீசிடம் ஆபாசமாக சீண்டிய திருச்சி ரவுடி..
போலீசிடம் ஆபாசமாக சீண்டிய திருச்சி ரவுடி..
திருச்சி மாவட்ட சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சோமரசம்பேட்டை கடைத்தெரு காவல் மையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடி நட்டு என்கின்ற நடராஜ் குடிபோதையில் காவல் மையத்தில் உள்ளே சென்று உள்ளிருந்த பொருட்களை எல்லாம் உடைத்து, போலீஸாரிடம் கொச்சை வார்த்தைகளில் பேசியதுடன், தனது ஆடைகளை ஆபாசமாக காண்பித்துவிட்டு சென்றுள்ளார்.
இதுதொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்த நிலையில் சிறிது நாட்கள் தலைமறைவாக இருந்த நடராஜ் கடந்த 23/07/2021 அன்று சோமரசம்பேட்டைக்குள் வரும்போது போலீசார் பிடிக்க முயற்சித்தபோது கோவில் நகர எம்எல்ஏ-வின் வீட்டின் அருகே ஓடிப்போய் தலைமறைவாகி உள்ளார்.
பின்தொடர்ந்து வந்த போலீசார் ஒருகட்டத்தில் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து நடவடிக்கை மேற்கொண்ட நிலையில்,.
சோமரசம்பேட்டை காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ஒருவருக்கு
செல்போனில் ஒரு அழைப்பு “உங்களுக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது போலிருக்கே”.. என்னன்னு முடிவு பண்ணிடுவோம். என்னோட வீடுன்னு கூட பாக்காம என்கிட்ட கேட்காம ஒருத்தன அழைச்சிகிட்டு போறீங்க பாத்துக்குறேன் உங்களனு சொல்லிட்டு போன வைத்துவிட்டாராம் அந்த தொகுதி எம்எல்ஏ..
போலீஸ் பிடிக்க போனது ஒரு சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபட்ட ரவுடியை ஆனால் எம்எல்ஏ இதிலும் தலையிடுவது போலீசார்களுக்கே தலை சுத்தல இருக்குதான்..
–இந்தர்ஜித்