புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் கார்கில் வெற்றியின் 25 ஆம் ஆண்டின் வெள்ளி விழா !
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் !
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் நாட்டுநலப் பணி திட்டத்தின் சார்பில் 05/08/2024 அன்று கார்கில் வெற்றியின் 25 ஆம் ஆண்டின் வெள்ளி விழாவினை சிறப்பு செய்யும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக திருச்சி ஆல்ஃபா விஸ்டம் வித்யாஸ்ரம் பள்ளியின் முதல்வர் பெரோஸ் ராட்ஸிங் கலந்து கொண்டு தலைமைத்துவம் என்பது பற்றியும் சிறந்த தலைமைத்துவத்திற்கான பண்பு பல நல்ல தலைவர்களை உருவாக்குவது தான் என்றும், விடாமுயற்சி தன்னம்பிக்கைக் குறித்த பல நல்ல தகவல்களை மாணவிகளுக்கு வழங்கினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி தலைமையில், கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி சற்குணா மேரி முன்னிலையில் நடைபெற்றது. .
இளங்கலை, இளம் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெர்லின் கோகிலா இக்கூட்டத்தின் ஏற்பாடு செய்தனர். திட்ட அலுவலர்கள் முனைவர் மேரி ஷீலா முனைவர் டாலி ஆரோக்கிய மேரி, ஆகியோர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பு செய்தனர்.