‘29’—ல் என்ன ஸ்பெஷல்?
டைரக்டர்கள் காத்திக்சுப்புராஜும் லோகேஷ் கனகராஜும் இணைந்து தயாரித்து வருகிற 08-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘29’. ‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களின் இயக்குனர் ரத்னகுமார் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் பாத்திமா, பிரேம்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : மாதேஷ் மாணிக்கம், இசை: ஷான் ரோல்டன்.
‘29’-ன் டிரெய்லர் ரிலீஸ் விழா ஏப்ரல் 29-ஆம் தேதி நடந்தது. இதில் படம் சம்பந்தப்பட்டவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் பி.எஸ்.வினோத்ராஜ், கார்த்திக் யோகி, அருண் மாதேஸ்வரன், பிராங்ளின் ஜோசப், ஆர்ஜே பாலாஜி, தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், மகேஷ்ராஜ் பசலியான், நடிகர் ரியோ ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசியவர்கள்…
ப்ரீத்தி அஸ்ராணி, “29 வயது இளைஞன், 21 வயது இளம் பெண்ணின் வாழ்க்கைப் பார்வை வித்தியாசங்களைப் பேசும் படம் இது. ரசிகர்கள் தங்களை எளிதில் தொடர்புப்படுத்திக் கொள்ளும் உணர்வுப்பூர்வமான காதல் கதை இது”.
விது, “ரத்னகுமார் என் மீது வைத்த அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றியிருப்பதாக நம்புகிறேன்”.
ஷான் ரோல்டன், “நீண்ட காலமாக என்னுள் மறைந்திருந்த காதல் உணர்வை இப்படம் மீட்டுள்ளது”.
ஸ்டோன் பெஞ்ச் கார்த்திகேயன் சந்தானம், “எங்களது தயாரிப்புகளில் கமர்ஷியலும் இருக்கும், அதே சமயம் சொல்ல வேண்டிய கதைகளையும் சொல்வோம். மற்றவர்கள் எளிதில் யூகிக்க முடியாத படங்களைத் தயாரிக்கிறோம். இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம். தனது நண்பன் ரத்னகுமாருக்காகத் தான் இப்படத்தின் கதைகூட தெரியாமல் தயாரிக்கிறார் லோகேஷ் கனகராஜ்.”
கார்த்திக் சுப்புராஜ், “ஸ்டோன் பெஞ்ச் கம்பெனியை ஆரம்பித்து குறும்படங்களைத் தயாரித்த போது அதில் ரத்னகுமாரின் ‘மது’ என்ற குறும்படமும் இருந்தது. அப்போதே ரத்னகுமாரின் எழுத்து மீது எனக்கு நம்பிக்கை. அந்த மது தான் ‘மேயாத மான்’ என்ற எங்களின் முதல் தயாரிப்பு. இப்போது மீண்டும் அவருடன் ’29’-ல் இணைந்துள்ளோம்”.
ரத்னகுமார், “நான் ஃபேஸ்புக்கில் போட்ட ஒரு சின்ன பதிவு தான், மெல்ல மெல்ல வளர்ந்து இப்போது ‘29’ ஆகியுள்ளது. இதற்கு காரணம் கார்த்திகேயன் சந்தானம் தான்”.
லோகேஷ் கனகராஜ், “சில குறும்படங்களை டைரக்ட் பண்ணிவிட்டு அலைந்து கொண்டிருந்த போது 2012-ல் வெளியான கார்த்திக் சுப்புராஜின் ‘பீட்சா’ தான் எங்களுடைய கனவுகளுக்கு மிகப்பெரிய கதவைத் திறந்துவிட்டது. குறும்படம் மூலம் என்னை அறிமுகப்படுத்தியதும் கார்த்திக் சுப்புராஜ் தான். இப்போது அதே கார்த்திக் சுப்புராஜுடன் தயாரிப்பாளராக இணைந்ததில் பெருமிதம் கொள்கிறேன். நான் இந்த இடத்திற்கு வரக்காரணமான மக்களுக்கு நன்றி”.
— ஆ ண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.