திருட்டு நகையில் இளம் பெண்களுடன் ஜல்சா  70 வயசு தாத்தா கைது ! –

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருட்டு நகையில் இளம் பெண்களுடன் ஜல்சா

 70 வயசு தாத்தா கைது ! –

 

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

திருடிய நகைகளை கொடுத்து பெண்களிடம் உல்லாசம் அனுபவித்த வயசான தாத்தா – திருட்டு வழக்கில் கைதானபோது திடுக் தகவல் திருட்டு வழக்குகளில் முதியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருடிய நகைகளை கொடுத்து பெண்களிடம் ஜல்சா பண்ணிய தகவல் வெளியாகி உள்ளது.

 

பெங்களூரு நிமான்ஸ் லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து வீட்டு உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் சுத்தகுண்டேபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். மேலும் திருட்டு நடந்த வீட்டின் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

 

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த நிலையில் அந்த காட்சிகளின் அடிப்படையில் வீட்டில் திருடியதாக ஒரு முதியவரை சுத்தகுண்டேபாளையா போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் சிக்கமகளூருவை சேர்ந்த வயதான தாத்தா ரமேஷ்(வயது 70) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான 162 கிராம் தங்கநகைகள், ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ரமேசிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

 

இளம் பெண்களுடன் ஜல்சா !

 

தாத்தா ரமேசுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து உள்ளது. அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ், 3-வதாக இளம்பெண் ஒருவரை திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதுபற்றி அறிந்த 2 மனைவிகள், பிள்ளைகள் சேர்ந்து ரமேசை வீட்டில் இருந்து வெளியேற்றினர். பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து தாத்தா ரமேஷ் அங்கு பூட்டி கிடந்த வீடுகளை குறிவைத்து நகை, பணத்தை திருடி உள்ளார்.

 

திருடிய நகை, பணத்தை சில பெண்களிடம் கொடுத்து அவர்களுடன் உல்லாசமும் அனுபவித்து வந்து உள்ளார்.  திருட்டு வழக்குகளில் தமிழக போலீசாரால் 4 முறை கைது செய்யப்பட்ட ரமேஷ் ஜாமீனில் வெளியே வந்து உள்ளார். பின்னர் அவர் பெங்களூருவுக்கு வந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும், திருடிய நகைகளை பல பெண்களிடம் கொடுத்து அவர்களிடம்  ஜல்சா பண்ணி  வந்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கைதான ஜல்சா தாத்தா ரமேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.