ஒரு பெண் ரைட்டரின் பெருமையான பக்கங்கள் !
சென்னை மெட்ரோவின் விஐபிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் அண்ணா நகர், திருமங்கலம் , திருவான்மியூர், நீலாங்கரை , சாஸ்திரி நகர் போன்றவைகள் தான். IAS , IPS அதிகாரிகளின் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகள் இவைகள் என்பதால் , விழிகளில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு அத்தனை விறைப்புடன் ஏரியாவை வலம் வருவார்கள் இன்ஸ்பெக்டர்களும் உதவி ஆணையர்களும்.
சாஸ்திரி நகர் காவல் நிலையம் 1999 ஆம் ஆண்டு காளிமுத்து கமிஷனராக இருந்தபோது திறப்பு விழா கண்டது. ஜெகதீஸ்வரன் என்னும் மிகத் திறமையான சட்ட ஒழுங்கில் சாகசம் காட்டிய ஓர் அதிகாரி இதன் முதல் ஆய்வாளர்.
பொதுவாக ஒரு காவல் நிலையத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் ரைட்டர்களின் கைகளில் தான் இருக்கும். லாக்கப் டெத் , ரெக்கார்டு மிஸ்ஸிங் ,CSR , எஃப் ஐ ஆர் , அரெஸ்ட் கார்டு போன்ற அத்தியாவசிய ஸ்டேஷனரி பற்றாக்குறை , காவல் நிலையம் முற்றுகை என்று வரிசையாக வந்து விழும் சோதனைகளால் சமயத்தில் ஆய்வாளர்களே திணறி விடுவார்கள். ஆனால், எதற்கும் அசராதவர்கள் இந்த ரைட்டர்கள்.
அப்படிப்பட்ட சென்சிடிவான இந்த ரைட்டர் பதவியில் சென்னை மெட்ரோவில் உள்ள காவல் நிலையங்களிலேயே முதல் முதலாக நியமிக்கப்பட்ட “பெண் ரைட்டர் “என்ற பெருமையைக் கொண்டது (2014) சாஸ்திரி நகர் காவல் நிலையம். ஆண்களுக்கு இணையாக , வேலையில் வெளுத்து வாங்கும் அசாதாரண திறமை மிக்கவர் இந்த பெண் ரைட்டர். Field ஒர்க்கிலும் , ரெக்கார்டு ஒர்க்கிலும் பின்ணியெடுத்து விடுவார்.

பிரிட்டிஷ் ஹை கமிஷனே புகழாரம் சூட்டிய பெருமையை பெற்ற அந்தப் பெண் ரைட்டரின் பெயர் விஜயலட்சுமி. லண்டனை சேர்ந்த Carry Larry என்ற இளம் பெண்ணை மாமல்லபுரத்தில் சில கிரிமினல்கள் சேர்ந்து சீரழிக்க மனநலம் பாதிக்கப்பட்டது அவருக்கு. பெசன்ட் நகரில் பிறந்த மேனியாக நகர்வலம் வந்த அந்த நாயகிக்கு இந்த பெண் ரைட்டரின் பாய்ந்து சென்று ஆடை போர்த்தி அவரை அரவணைத்து காப்பாற்றினார்.
சக போலீஸ்காரர்களே பைத்தியம் என்று அந்த பெண் மீது முத்திரை குத்தி , மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது , இந்த பெண் ரைட்டர் அந்த முயற்சியை தடுத்து நிறுத்தினார். அந்தப் பெண்ணை அரசு பொது மருத்துவமனையில் அணுமதித்தார். 10 நாட்கள் விடுப்பில் சென்று அந்த அபலை பெண்ணுடன் கூடவே தங்கி இருந்து , சிகிச்சை அளித்து அவரை அரவணைத்தார்.
உடல் நலமும் , மன நலமும் முற்றிலும் தேறியதும் , அந்த வெளிநாட்டு பெண் மெய்சிலிர்க்க நன்றி உணர்ச்சி மேலிட ” Thank you so much விஜயலட்சுமி ” என்று கண்ணில் நீர் வழிய கட்டி தழுவி இருக்கிறார் பெண் ரைட்டரை.
நிராதரவாக விடப்பட்ட தங்கள் நாட்டுப் பெண்ணை குணப்படுத்தி , லண்டனுக்கு அனுப்பி வைத்த அந்த பெண் ரைட்டரின் மனிதநேய சேவையை பாராட்டி BRITISH HIGH COMMISSION உயர் அதிகாரி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
ஆனால், காவல்துறையில் கீழ் உள்ளவர்களின் பெர்பார்மன்ஸை வாய்விட்டு பாராட்டும் பரந்த மனப்பான்மை பலரிடமும் இருக்காது. அந்தப் பெண் ரைட்டரின் பெருமையை வெளியே வரவிடாமல் மண்ணோடு புதைத்து விட்டார்கள் மனசாட்சியும் மனிதநேயமும் அற்ற சில உயர் அதிகாரிகள்.
தன் சிறப்பான செயல்பாடுகளால் சிறகடித்து பறந்த அதே சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் , 12 வருட நீண்ட இடைவெளியில் , இன்று குற்றப்பிரிவு அதிகாரியாய் மீண்டும் குடி புகுந்திருக்கிறார் விஜயலட்சுமி. வாழ்த்துக்கள் விஜயலட்சுமி !
— இந்திரஜித்








Comments are closed, but trackbacks and pingbacks are open.