அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘பிளாஸ்ட்’

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தயாரிப்பு: ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் சுரேஷ், கல்பாத்தி எஸ் கணேஷ். கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அர்ச்சனா கல்பாத்தி, இணை தயாரிப்பாளர்: ஐஸ்வர்யா கல்பாத்தி. டைரக்டர்: சுபாஷ் கே ராஜ். ஆர்டிஸ்ட்: ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், ஜான் கொக்கேன், விவேக் பிரசன்னா, திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், பாலா ஹசன், வினோத் சாகர். ஒளிப்பதிவு: அருண் ராதாகிருஷ்ணன், இசை: ரவி பஸ்ரூர், எடிட்டிங்: பிரதீப் ராகவ், ஸ்டண்ட் : ஃபீனிக்ஸ் பிரபு, ஆர்ட் டைரக்டர்: வீரமணி கணேசன், காஸ்ட்யூம் டிசைனர்: தினேஷ் மனோகரன், பிஆர்ஓ: நிகில் முருகன்

’அநியாம் எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்கணும். பாதிக்கப்பட்டவர்கள் நமக்குத் தெரிஞ்சவர்களா இல்லாட்டியும் உதவி பண்ணனும். இதான் நாம மனிதனா பிறந்ததுக்கு அர்த்தம்’ இதுதான் இந்த வாரம் ரிலீசாகியிருக்கும் சூப்பர்ஹிட் படமான ‘பிளாஸ்ட்’டின் மெயின் கண்டெண்ட்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

கராத்தே மாஸ்டரான ராஜாராமன் [ ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்] சின்ன வயதிலிருந்தே தனது மகள் நிலாவுக்கு[ப்ரீத்திமுகுந்தன்] கராத்தே கற்றுத்தருவதுடன் தைரியத்தையும் ஊட்டுகிறார். ராஜாராமனின் மனைவி நீலவேணி[அபிராமி] வீட்டிலிருந்தே தையல் வேலை செய்யும் குடும்பத் தலைவி. மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் இளங்கோ[விவேக் பிரசன்னா] தனது அண்ணன் குடும்பத்துடனேயே வசிக்கிறார். படித்து முடித்து ஐடி கம்பெனி வேலைக்குப் போனாலும் சிறுவயதில் அப்பா கற்றுக் கொடுத்த கராத்தேவையும் போதனையையும் மறக்கவில்லை நிலா.

பிளாஸ்ட்இந்த நிலையில் தான் பஸ்ஸில் பயணிக்கும் போது வயதான பெண்மணி ஒருவரின் நிலத்தை போலி பத்திரம் மூலம் ஆக்கிரமித்திருக்கும் ரவுடி ஒருவனின் அடாவடியை கேட்டு, அந்த ரவுடியை பின்னி பெடலெடுக்கிறார் ப்ரீத்தி முகுந்தன். ஹீரோயினுக்கு இப்படி ஒரு அதிரடியான இண்ட்ரோ சீனை தமிழ் சினிமாவில் நாம் பார்த்ததில்லை. அடேங்கப்பா… அந்தப் புள்ள ப்ரீத்தி முகுந்தன் கால்களை காற்றில் சுழட்டி, ரவுடிகளை பஞ்சராக்கும் அந்த சீன் செம பிளாஸ்ட் சீன். அதே போல் ஐடி கம்பெனி மேனேஜரை காருக்குள்ளேயே வைத்து சுளுக்கெடுப்பது செம ஜோர். ப்ரீத்தி முகுந்தனின் ஆக்‌ஷன் சீன்களில்  கைவலிக்கும் வரை கைதட்டிக் கொண்டே இருக்கலாம். தென்னிந்திய சினிமாவின் லேடி ஜாக்கிசான், புரூஸ்லி எனச் சொல்வதற்கு மிகவும் பொருத்தமானவர் தான் ப்ரீத்தி முகுந்தன்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

சுரங்க மாஃபியாவான வருண் தயாளன் [ ஜான் கொக்கேன்] கும்பல், கொடைக்கானல் மலைகிராமம் ஒன்றில் இருக்கும் ஏழாயிரம் கோடி ரூபாய் கனிமவளத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்டு அமைச்சர் ஒருவருக்கு ஆயிரம் கோடி பேரம் பேசுகிறது. அங்கே இருக்கும் மலையை உடைத்தால் அந்த கிராமமே மண்ணுக்குள் புதைந்துவிடும் அபாயத்தை அலட்சியப்படுத்துகிறது சுரங்க மாஃபியா.

இந்த மாஃபியா கும்பல் அர்ஜுன் ஃபேமிலிக்குள் எப்படி எண்ட்ரியாகிறது? அந்த கும்பலை  அர்ஜுன் ஃபேமிலி எப்படி வதம் செய்கிறது? இதான் இரண்டே கால் மணி நேரம் சூப்பர் ஃபாஸ்ட் ‘பிளாஸ்ட்’

பிளாஸ்ட்அர்ஜுன் ஒரு கராத்தே மாஸ்டர் என்றால் அவரது மனைவி அபிராமியும் கராத்தே வீரர் தான் என்பதை இடைவேளைவிடும் நேரத்தில் அபிராமியையும் அதிரடி ஆக்‌ஷனில் இறக்கி அசரடிக்கிறார் டைரக்டர் சுபாஷ் கே.ராஜ். அந்த சீனில் பாலா ஹசன் தலைமையிலான ரவுக்கும்பல் ஒன்று அர்ஜுன் & ஃபேமிலியிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் ஆக்‌ஷன் பிளாக்கை செமத்தியாக வடிவமைத்திருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் ஃபீனிக்ஸ் பிரபு. இவர் தான் படத்தின் ஆஃப் ஸ்கிரீன் ஹீரோ. அதிலும் ப்ரீத்தி முகுந்தன் அர்ஜுனிடம், “செத்துப் போன இந்த ரெண்டு பேரையும் புதைச்சிரலாம் சரி, ஒளிஞ்சி நிக்குற அவனுகள [பாலா ஹசனும் ஒரு ரவுடியும்] என்ன பண்றதுப்பா” என கேட்கும் சீன் செம ஃபயர். அப்போது வீட்டுச் சுவற்றில் புரட்சியாளர் சேகுவேராவின் போட்டோவைக் காட்டியிருப்பது டைரக்டரின் சூப்பர் டச்.

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

’ஆக்‌ஷன் கிங்’ என்பதை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தக்க வைத்திருக்கிறார் அர்ஜுன். அடேங்கப்பா… மனுஷன் கால்களை சர்வசாதரணமாக தூக்கி அடித்து கதிகலங்க வைக்கிறார். பாடியையும் செம ஃபிட்டாக வைத்திருக்கிறார். சின்ன வயதில் கராத்தே போட்டியில் தோற்ற தனது மகள் நிலாவிடம், “நான் முப்பத்து நாலு டோர்னமெண்டில் 33-ல் ஜெயிச்சேன். ஒண்ணுலதான் தோற்றேன், அதுவும் உங்க அம்மாவுடன் நடந்த டோர்னமெண்ட்ல” என ஆறுதல் சொல்லும் சீனிலும்  க்ளைமாக்ஸில் ஜான்கொக்கேன் கும்பலைப் புரட்டி எடுத்துவிட்டு, தனது மகளைப் பார்க்கும் சீனிலும் நடிப்பிலும் அசத்திவிட்டார் அர்ஜுன்.

பிளாஸ்ட்குடும்பமே கராத்தே அதிரடி குடும்பம் என்னும் போது அர்ஜுனின் தம்பியாக வரும் விவேக் பிரசன்னாவை சும்மாவிட்ருவாரா டைரக்டர்? க்ளைமாக்ஸில் அபிராமியுடன் சேர்ந்து ஆக்‌ஷனில் அதகளம் பண்ணியிருக்கார் விவேக் பிரசன்னா.

வில்லன் கும்பலின் அடியாட்களாக வரும் பவன், அர்ஜுன் சிதம்பரம், வினோத் சாகர் என எல்லா கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கார் டைரக்டர். பரபர ஆக்‌ஷன் சீக்வென்ஸை பக்காவாக படம் பிடித்திருக்கிறார் கேமராமேன் அருண் ராதாகிருஷ்ணன். ரவிபஸ்ரூரின் பின்னணி இசை சில சீன்களில் ஓவர் சவுண்டாகிவிட்டது.

இளம் ஹீரோயின் ப்ரீத்தி முகுந்தனுக்கு காதல் இல்லை, டூயட் இல்லை. அர்ஜுன் -அபிராமிக்கிடையே கண்ணீர் சிந்தும் காட்சிகள் இல்லை. இப்படி எந்த ’இல்லை’யும் இல்லாமல், பெண் கதாபாத்திரங்களை தோற்றுப்போகவிடாமல் வீரமங்கைகளாக மட்டுமே காட்டியதற்காக டைரக்டர் சுபாஷ் கே.ராஜை ஆரத்தழுவி உச்சி முகர்ந்து பாராட்டலாம்.

மொத்தத்தில் ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்டின் இந்த ‘பிளாஸ்ட்’ 100% எண்டெர்டெய்ன்மெண்டுக்கும் எனெர்ஜிக்கும் க்யாரண்டி.

அங்குசம் பார்வையில் ‘பிளாஸ்ட்’ 60/100

—  ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.