‘சிக்மா’ பிரஸ் மீட்! ஜேசன் சஞ்சய் ஆப்சென்ட்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது விஜய், நடிகர் விஜய்யாக இருந்த போது நடந்தது இது. அதாவது கனடாவில் சினிமா டைரக்ஷன் குறித்து படிப்பை முடித்தார் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். ஆங்கிலத்தில் ஓரிரு குறும்படங்களை இயக்கி அனுபவம் பெற்ற ஜேசன் சஞ்சய்யை பெரும் பட டைரக்டராக ஒப்பந்தம் செய்தார் ‘லைக்கா’ சுபாஸ்கரன். இதை முன்னின்று நடத்தினார் ‘லைக்கா’ வின் சிஇஓ தமிழ்க் குமரன்.

மகன் சினிமா டைர்கடரானதற்கு எந்தவொரு ரியாக்ஷனும் காட்டாமல் இருந்தார் நடிகர் விஜய். ( இதற்கான காரணமெல்லாம் ஆறு மாதங்களுக்கு முன்பு, அதாவது 2026 பிப்ரவரியில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் அம்பலப்பட்டு சந்தி சிரித்தது தனிக்கதை). அந்த கண்றாவிக் கதைகள் கிடக்கட்டும்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இப்ப கரண்ட் மேட்டருக்கு வருவோம். நடிகர் விஜய், இப்ப முதல்வர் ஜோசப் விஜய் ஆகிவிட்டார். கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் லைக்கா ஒரு வழியாக ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை முடித்தது. சில ரிலீஸ் தேதிகளை முடிவு பண்ணி, எதுவுமே முடியாமல் போய், ஒரு வழியாக இந்த அக்டோபர் 02- ஆம் தேதி ‘சிக்மா’ ரிலீஸ் என அறிவித்தது லைக்கா.

ஒரு மாதத்திற்கு முன்பு படத்தின் புரமோஷன் வேலைகள் ஆரம்பித்தன.  ‘பெய்ட்'( Paid) யூடியூப் சேனல்களான கலாட்டா, பிஹைண்ட் உட்ஸ், ஏஞ்சலின் இருக்கும் எஸ்.எஸ்.மியூசிக் உட்பட சிலவற்றிற்கு லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்தது லைக்கா. அதில் ஜேசன் சஞ்சய்யால் ‘டிக்’ அடிக்கப்பட்ட கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. இடையிடையே “மானே….தேனே….” போட்டுக் கொள்வது போல…. தனது அப்பாவைப் பற்றி லைட்டா பேசினார் ஜேசன் சஞ்சய். புரமோவின் அடுத்த கட்டம் ஆரம்பமானது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சேலம் மற்றும் கோவையில் கூலி கொடுத்து கூட்டி வரப்பட்ட இளைஞர்கள் மத்தியில் பேசினார் ஜேசன் சஞ்சய். அதற்கடுத்து கேரளாவிலும், ஹைதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவி முன்னிலையிலும் புரமோஷன் வேலைகள் சூடுபிடித்தது.  எல்லா நிகழ்வுகளிலும் தமிழ்க் குமரன் கலந்து கொண்டார்.  போனா போகுது சென்னையில் ஒரு புரமோவை நடத்துவோம் என முடிவு செய்தது லைக்கா. செப்டம்பர் 29- ஆம் தேதி மாலை சென்னை தாஜ் ஹோட்டலில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்கிறது என செப்.28-ல்  மீடியாக்களுக்கு தகவல் அனுப்பினார் படத்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா. என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ….. தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அதே நாள் காலை தகவல் வந்தது. அதன் பிறகு என்ன நடந்ததோ… ஏது நடந்ததோ…..

செப்.30-ஆம் தேதி மதியம் அதே தாஜ் ஹோட்டலில் பிரஸ் மீட் நடக்கும் என தகவல் வந்தது. ஜேசன் சஞ்சய் இப்போது முதல்வர் ஜோசப் விஜய்யின் மகன் என்பதால் தாஜ் ஹோட்டலில் மீடியாக்கள் குவிந்தன. மதிய உணவு முடிந்து 2.15 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. முதலில் மைக் பிடித்த தமிழ்க் குமரன்,” தவிர்க்க முடியாத காரணங்களால், அதாவது ஜேசன் சஞ்சய்க்கு காய்ச்சல் என்பதால் அவரால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை” என்ற தகவலை சொல்லிவிட்டு, படம் சூப்பராக வந்திருக்கு. படத்தின் வெற்றிக்கு மீடியாக்கள் சப்போர்ட்டாக இருக்கணும் என வேண்டுகோள் வைத்தார் தமிழ்க் குமரன்.

அதன் பிறகு படத்தின் ஆர்ட் டைரக்டர் பெஞ்சமின், ஹீரோயின் ஃபரியா அப்துல்லா, ஹீரோ சந்தீப் கிஷன் ஆகியோர் சுருக்கமாக பேசியதால் அரை மணி நேரத்தில் நிகழ்ச்சி முடிந்தது.  அதன் பின் சில நிமிடங்கள் மீடியாக்களின் கேள்விக்கு பதில் சொன்ன சந்தீப் கிஷன், ஜேசன் சஞ்சய் ஹீரோ அவதாரம் எடுப்பார் என்பதையும் மறக்காமல் பதிவு செய்தார்.   அக்டோபர் 02-ஆம் தேதி மதியம் ‘சிக்மா’ பிரஸ் ஷோ முடிந்ததும் ஜேசன் சஞ்சய் உட்பட  பட சம்பந்தப்பட்ட அனைவரும் மீடியாக்களை சந்திப்பார்கள் என 30- ஆம் தேதி மதியம் தகவல் அனுப்பியுள்ளார் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா. பார்ப்போம் அன்றைக்கு என்ன நடக்குதுன்னு?

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.