டிசம்பர் 04-ல் வருகிறான் ‘மக்கள் காவலன்’
கே. மணிகண்டன் நடிப்பில் பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள அதிரடி படமான ‘மக்கள் காவலன்’ வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
லட்சியம் -மன உறுதி- தடைகளை கடந்து முன்னேறும் துணிச்சல்- ஆகியவை ‘மக்கள் காவலன்’ படத்தின் மையப் புள்ளியாகும். சந்தோஷ் குமார் டைரக்ட் பண்ணியுள்ளார். மணிகண்டனின் சினிமா பயணத்தை ஏறத்தாழ பிரதிபலிக்கும் கதை தான் மக்கள் காவலன்.
‘பைசன் காளமாடன்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் கூட்டணியில் உருவாகும் படம் இது .
‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ என வரிசையாக மூன்று படங்களின் வணிக ரீதியான வெற்றியைத் தொடர்ந்து ‘மக்கள் காவலன்’-ல் முதன்முறையாக ஒரு அதிரடியான ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார் மணிகண்டன்.
— ஆண்டவர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.