ரூட் மாபியா எப்படி செயல்படுகிறது…
Route mafia எப்படி வேலை செய்து உங்கள் குழந்தைகளை நாசம் பண்ணி வைச்சு இருக்குனு.. பார்த்துகோங்க…
ரூட் மாபியா எப்படி செயல்படுகிறது…
டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் மாணவர்களை குறிவைத்து ஒரு பெரிய network மாதிரி செயல்பாடு நடக்கிறது. ஆரம்பத்தில் “like போடு”, “share பண்ணு”, “comment பண்ணு”, “screenshot அனுப்பு” மாதிரி சாதாரண online வேலை போல காட்டுறாங்க. Screenshot அனுப்பினால் உடனே பணம் தர்றாங்க. இதனால் school, college students எளிதாக இந்த network-க்குள் இழுக்கப்படுறாங்க.
ஒரு தடவை நான் Telegram voice chat-ல் join பண்ணி அவங்க பேசுறதை கேட்டேன். ஆனால் யார் unfamiliar account-ன்னு கண்டுபிடிச்சு உடனே remove பண்ணிட்டாங்க. அதிலிருந்து இது சாதாரண group இல்ல, organized network-ன்னு புரிஞ்சது.
ஒருத்தன் minimum 2–3 WhatsApp மற்றும் Telegram groups maintain பண்ணுறான். அந்த groups எல்லாம் நேரடியாக political name அல்லது ஒரே பெயரில் இருக்காது. சிலது TNPSC, education, jobs, motivation, meme, entertainment groups மாதிரி disguise பண்ணப்பட்டிருக்கும். பழைய active groups-ஐ விலைக்கு வாங்குறாங்க. சில inactive groups-ஐ revive பண்ணுறாங்க. சில groups hack பண்ணி use பண்ணுறாங்க.
இதுல screenshot அனுப்புறவர்களுக்கு தனியா payment groups இருக்கு. Hashtag timing, posting pattern, IDs check பண்ணீங்கனா ஒரே network-ன்னு புரியும். ஒரே ஆள் 2–3 fake IDs use பண்ணுறான்.
College-ல group group-ஆ students recruit பண்ணப்பட்டிருக்காங்க. இது engineering, polytechnic students மத்தியில் அதிகம். குறிப்பாக 3rd year students தான் admin level-ல அதிகமா இருக்காங்க. School students வரை இந்த influence போயிருக்கு. நான் teacher; என் students கூட பல Telegram groups-ல active-ஆ இருக்காங்க. சில groups-ல minimum 4K members, சில channels-ல 10K+ members இருக்காங்க. இது கிளை கிளையா பிரிந்து இயங்குற system மாதிரி இருக்கு.
Money flow ரொம்ப அதிகமா இருக்கு. ஒருத்தன் ஒரு நாளைக்கு ₹500–₹1000 வரை earn பண்ணுறான். Leave days, semester holidays, free time எல்லாத்தையும் use பண்ணி students-ஐ full-time online activity-க்குள் இழுக்குறாங்க. “Easy money” காட்டி படிப்பு concentration-ஐ destroy பண்ணுறாங்க.
அதிகமா target பண்ணப்படுறது:
Polytechnic students
Engineering students
Hostel students
Part-time job போகுற students
செலவு செய்ய பழகிய students
Social media-ல் அதிக நேரம் spend பண்ணுறவர்கள்
Government school students கூட இந்த influence-க்கு உள்ளாக ஆரம்பிச்சுட்டாங்க.
இதோட பெரிய பாதிப்பு studies மட்டும் இல்ல:
Character change
Addiction to money & attention
Porn / fake Instagram content exposure
Sleep cycle damage
Concentration loss
Semester arrears
Mental pressure
Family problems
Online dependency
Instagram-ல fake glamour IDs உருவாக்கி, followers வாங்கி, pages maintain பண்ணுறாங்க. அந்த pages மற்றும் groups மூலம் students-ஐ slowly manipulate பண்ணுறாங்க. சில accounts purely engagement மற்றும் influence காகவே use பண்ணப்படுறது.
எனக்கு தெரிஞ்ச ஒரு student ID-ல மட்டும் கிட்டத்தட்ட 50K posts இருந்தது. நிறைய amount transfer records இருந்தது. இரண்டு வருடமா இந்த மாதிரி network build பண்ணி operate பண்ணியிருக்காங்க. இது ஒரு small prank level விஷயம் இல்ல; organized online influence system மாதிரி இருக்கு.
இப்போ TNPSC preparation groups, education groups, study circles-ல கூட infiltrate பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. Contact collection, forwarding network, mass engagement — எல்லாமே planned-ஆ நடக்குது.
இதன் விளைவாக:
Semester results drop ஆகுது
Attendance குறைகிறது
Students focus போகுது
Real career goals disappear ஆகுது
Online validation-க்காக வாழ ஆரம்பிக்கிறாங்க
இந்த விஷயத்தை கீழ்மட்டத்திலிருந்து serious-ஆ investigate பண்ணணும். ஒரே ஒரு active admin-ஐ trace பண்ணினாலும், minimum ஆயிரக்கணக்கான connected accounts கிடைக்க வாய்ப்பு இருக்கு.
@arivalayam @DMKITwing போன்ற political IT wings அல்லது cyber awareness teams இதை கவனிக்கணும். சாதாரண online promotion-ன்னு ignore பண்ணக்கூடாது. Chennai, Trichy, Salem போன்ற இடங்களில் இது அதிகமா தெரிகிறது.
ஒரு suspicious mobile account அல்லது Telegram setup properly analyze பண்ணீங்கனா:
multiple fake IDs
timing patterns
hashtag coordination
payment screenshots
repost chains
hidden admin structure
எல்லாமே connect ஆகி தெரியும்.
இது politics மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல. இது students-ஓட:
studies
mindset
discipline
future
personal life
எல்லாத்தையும் பாதிக்கக்கூடிய விஷயம்.
இதைக் காலத்திலேயே stop பண்ணலன்னா, அடுத்த சில வருடங்களில் பெரிய அளவில் academic மற்றும் social damage வரும்.
route mafia எப்படி வேலை செய்து உங்கள் குழந்தைகளை நாசம் பண்ணி வைச்சு இருக்குனு.. பார்த்துகோங்க…
— பிரகாஷ் JP







Comments are closed, but trackbacks and pingbacks are open.