அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நூலேணி பதிப்பகத்தின் ஹைக்கூ திருவிழா – 2026 ல் கண்ணாடித் துண்டுகள் தொகுப்பு நூல் வெளியீடு.

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

அண்மையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற ஹைக்கூ திருவிழா – 2026 ல் மதிப்புறு முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் மற்றும் கவிஞர் ந.வேலாயுதம் இருவரும் தொகுத்த 88 ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய “ கண்ணாடித் துண்டுகள் “ என்னும் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

நூலினை முனைவர் இராம்.குருநாதன் அவர்கள் வெளியிட மூத்த ஹைக்கூ கவிஞர் சஞ்சீவி மோகன் பெற்றுக்கொண்டார். விழா மேடையில் தொகுப்பாசிரியர்கள் கா.ந.கல்யாணசுந்தரம், ந.வேலாயுதம் உள்பட கவிஞர்கள் முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி, அனுராதா சௌரிராஜன்,மலேசிய கவிஞர் சிவா லெனின், தமிழ்ப்பல்லவி ஆசிரியர் கவிஞர் பல்லவி குமார், ஆசா பதிப்பகம் கவிஞர் ஆரீசன் , கவிஞர் யுகபுத்திரன், நூலேணி பதிப்பகம் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா மற்றும் அன்புப்பாலம் ஆசிரியர் பன்முகத் தென்றல் ச.விஜய் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

நூலினை வெளியிட்ட நூலேணி பதிப்பக உரிமையாளரும் அழ வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது பெற்றவருமான கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் விழாவின் நோக்கவுரையில் கண்ணாடித்துண்டுகள் தொகுப்பு குறித்து வாழ்த்துகள் கூறினார். 88 கவிஞர்கள் பங்குபெற்றுள்ள இந்த தொகுப்பு நூலினை 88 அகவை நிறைந்த , தமிழ் ஹைக்கூ உலகின் முன்னோடியான ஓவியக்கவிஞர் அமுதபாரதிக்கு அர்ப்பணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. விழாவில் 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.