அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

துறையூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவர் திருவிழா

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

துறையூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி – திருச்சிராப்பள்ளி பொங்கு தமிழ் இளையோர் இயக்கம் இணைந்து 28.07.2026ஆம் நாள் கல்லூரி கலையரங்கில் திருவள்ளுவர் திருவிழா நடைபெற்றது. இவ் விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் மு.அருணாசலம் தலைமை தாங்கினார். பொங்கு தமிழ் இளையோர் இயக்கத்தின் மேலாண்மை அறங்காவலர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் வரவேற்புரையாற்றினார். முன்னாள் ஒன்றிய அரசின் வணிகவரி அதிகாரி ப.மாணிக்கம் முன்னிலை வகித்து, சிறப்புரையாளர் மற்றும் கல்லூரி முதல்வருக்குப் பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்தார்.

கல்லூரி முதல்வர் மு.அருணாசலம் உரையாற்றும்போது,“உலகின் பலமொழிகளில் அறஇலக்கியங்கள் தோன்றி இருக்கின்றன. முதலில் எழுத்து வடிவத்தில் தோன்றிய முதல் அறஇலக்கியம் திருக்குறள் என்பது பெருமைக்குரியது. உலகில் தோன்றிய அறஇலக்கியங்கள் கூறிய வாழ்வியல் கருத்துகளைவிடவும் காலத்தால் முந்திய திருக்குறள் மிகவும் சிறப்பாக எடுத்துக்கூறியுள்ளது. சீன அறிஞர் லாவோட்சு,“நல்ல சொற்கள் ஒருவனுக்கு மதிப்பு பெற்றுத் தரும். தேடித்தரும். நல்ல செயல்கள் ஒருவனுக்கு மதிப்பு பெற்றுத்தரும்” என்று குறிப்பிடுகின்றார். வள்ளுவர்,“இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவந்த தற்று” என்று எளிமையாகச் சுவையான கனி போன்ற சொற்கள் இருக்கத் துவர்க்கும் காய் போன்ற சொற்களை ஏன் நாம் சொல்லவேண்டும் என்று குறிப்பிடுகின்றார். வள்ளுவம் உலகப் பொதுமறையாகத் திகழ்கிறது. வள்ளுவரைப் போற்றுவோம். அவர் கருத்தியல் சார்ந்த வள்ளுவத்தையும் போற்றுவோம்” என்று குறிப்பிட்டார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

தொடக்கவுரையாற்றிய பாவலர் குறள்மொழி,“மாணவர்கள் பெற்றிட வேண்டி அடிப்படை உணர்வு இனம், மொழி, பகுத்தறிவு என்பதாகும். உலகத்திற்கே பொதுமறை எழுதிய திருவள்ளுவர் நம் இனம். நம் தமிழ்இனம் என்பது நமக்குப் பெருமை. அவர் எழுதிய திருக்குறள் தமிழ் மொழியில் எழுதப்பட்டது. உலகத்து அறிஞர்கள் அனைவரும் திருக்குறளின் பெருமையை உணர்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைப் படித்து இன்புறுகின்றனர். திருவள்ளுவர் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவரின் அறக்கருத்துகள் அனைத்தும் பகுத்தறிவு சார்ந்தவை. நம் அறிவை மேம்பாடு அடையச் செய்யும் வலிமையுடைய சிறந்த கருத்துகள். எனவே, திருவள்ளுவர் திருவிழா மூலம் திருக்குறளைப் போற்றுவோம். இனம், மொழி, பகுத்தறிவு சிந்தனையோடு மாணவர்கள் வாழவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று உரையை நிறைவு செய்தார்.

விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய தமிழ்நாடு அரசின் பாவேந்தர் விருது பெற்ற புலவர் செந்தலை ந.கவுதமன்,“பொங்கு தமிழ் இளையோர் இயக்கம் திருவள்ளுவர் திருவிழா என்ற நிகழ்வை நடத்தி மாணவர்களுக்குத் திருவள்ளுவரைப் பற்றியும், வள்ளுவத்தின் கருத்தியல் பற்றியும் எடுத்துரைக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இந்தக் கல்லூரி முதல்வர் மு.அருணாசலம் அவர்கள் வள்ளுவராதல் எளிதில்லை என்ற நூலை எழுதியுள்ளார். உலகத்து அறநூல்களோடு திருக்குறளை ஒப்பாய்வு செய்து சிறப்பாக நூலைப் படைத்துள்ளார். துறையூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த விழா நடப்பது எல்லா வகையிலும் சிறப்புடையதே என்றால் அது மிகையில்லா உண்மையாகும்.

யாவரும் கேளீர்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேடையில் அமர்ந்துள்ள அறிஞர் பெருமக்கள் அனைவரும் ஒரு காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களாக இருந்து உயர்ந்தவர்கள்தான். இன்றைக்கு மாணவர்களாக உள்ள நீங்கள் நன்றாகப் படித்து, நீங்களும் அறிஞராக மேடையில் அமரும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். அப்படிப்பட்ட வாய்ப்பை மாணவர்கள் உருவாக்கிக் கொள்ளவேண்டும். திருவள்ளுவர் சொல்கிறார், பிள்ளை பிறக்கும் நேரத்தில் தாய் மிகவும் மகிழ்ச்சி அடைவாள். அதைவிடவும் அந்தத் தாய் எப்போது பெரும் மகிழ்ச்சியடைவாள் என்றால், தன் மகனை/மகளைச் சான்றோன் என்று கேட்ட நேரத்தில் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். இந்தக் கல்லூரியில் படிக்கும் நீங்கள் அனைவரும் கல்வி அறிவை முழுமையாகப் பெற்று உலகம் உங்களைச் சான்றோன் என்று புகழவேண்டும். அந்தப் புகழ் மொழியை உங்கள் பெற்றோர் கேட்டு மகிழவேண்டும் என்ற வகையில் நீங்கள் அனைவரும் வள்ளுவரின் வாய்மொழியான திருக்குறளைப் படித்துச் சமூக அறிவு பெற்றுப் பகுத்தறிவு சிந்தனையோடு மாணவச் செல்வங்கள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன். வள்ளுவர் சொல்லாத பொருள் இல்லை. வள்ளுவத்தைப் படித்தால் நாம் வாழ்வில் உயரமுடியும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் வாழ்வில் உயரவேண்டும்” என்று வள்ளுவத்தின் பெருமைகளை எடுத்துக்காட்டினார்.

திருவள்ளுவர் திருவிழா தொடர்பாக நடைபெற்ற பேச்சு போட்டியில் முதலிடத்தில் தேர்வு பெற்ற 1. த.பிருந்தா(இரண்டாம் ஆண்டு அரசியல் அறிவியல்)  2.R.லாவண்யா (முதலாம் ஆண்டு அரசியல் அறிவியல்) 3.பா. சக்தி ஈஸ்வர்(இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல்) கவிதை போட்டியில் முதலிடம் பெற்ற   1.சி.ரிகாஸ்டி (முதலாமாண்டு வணிகவியல் துறை) 2.சு.கனிஸ்கா (கணினி அறிவியல் முதலாம் ஆண்டு) 3. பா.சக்திஈஸ்வர் (கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு) கட்டுரை போட்டியில் முதலிடம் பெற்ற 1.பி.சொர்ணலதா (கணினி பயன்பாட்டியல் முதலாமாண்டு) 2.த.பிருந்தா (பி.ஏ.அரசியல் அறிவியல் இரண்டாம் ஆண்டு) 3.மு.ஸீகாந்த் (அரசியல் அறிவியல் இரண்டாம் ஆண்டு) ஆகிய மாணவர்களுக்குத் திருக்குறள் அடங்கிய அறிவுசார்ந்த நூல்களும் சான்றிதழ்களையும் சிறப்புரையாளர் செந்தலை ந.கவுதமன் வழங்கினார்.

விழாவின் நிறைவாகக் கல்லூரியின் வேதியல் துறைத் தலைவர் முனைவர் இராஜதுரை நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளைத் திருச்சி தந்தை பெரியார் கலை அறிவியல் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் சு.செயலாபதி அவர்கள் தொகுத்து வழங்கினார். விழாவில் கல்லூரி நூலகத்திற்குப் பொங்குதமிழ் இளையோர் இயக்கத்தின் அறங்காவலர் அரசெழிலன் வழங்கிய நூல்களைக் கொடையாக முதல்வரிடம் வழங்கப்பட்டது. நூல்களைப் பெற்றுக்கொண்ட கல்லூரி முதல்வர் அரசெழிலன் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

—  சிறப்பு செய்தியாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.