கருணாநிதி இப்போதிருந்தால் கூட …

இந்தத் தேர்தலில் சிறப்பாகச் செயல்பட்டது திமுக தான். ஆக்சுவலி அவர்களுக்குத் தோற்போம் எனத் தெரிந்து விட்டது. ஒரு கட்சியால் என்னென்ன டேமேஜ் கண்ட்ரோல் செய்ய முடியுமோ செய்தார்கள். இந்தியாவில் வேறெந்தக் கட்சியும் இந்த அளவுக்குச் செய்து பார்த்ததில்லை.
தேர்தலுக்கு முன்பு நான் எழுதியிருந்தேன். திமுக டேட்டா டிரைவனாக இயங்குகிறது என்று.
கூடியவரை விட்டுக் கொடுத்து எல்லாக் கட்சியுடனும் (!?) கூட்டணி அமைத்தார்கள். முன் கூட்டி 5000 வரவு வைத்தார்கள். 8000 ரூபாய் கூப்பன் கொடுப்போம் என்றார்கள். கேஷ் பேக் மட்டும் தான் அறிவிக்கவில்லை. தமிழகம் வெல்லும், தமிழ்ப்பெண்கள் வெல்வார்கள் என என்னென்னமோ செய்தார்கள்.

அராத்து
அராத்து

கருணாநிதி இப்போதிருந்தால் கூட ஸ்டாலின் தலைமையிலான இந்த வெற்றி கிட்டியிருக்காது. இதே நிலைமையில் அதிமுக அல்லது வேறெந்தக் கட்சி இருந்திருந்த்தாலும் நான்கு சீட்டுக்கு கீழே நக்கிக் கொண்டு போயிருக்கும் போல :
அந்த வகையில் தற்போதிருக்கும் திமுக தலைமைக்கு இது தோல்வி அல்ல. படு கேவலமான தோல்வியில் இருந்து தப்பித்த ஸ்டேட்ரஜிக்கலான வெற்றிதான்.
ஆனால் , இதற்கு போட்ட உழைப்பை ?

—  அராத்து

Comments are closed, but trackbacks and pingbacks are open.