அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இன்ஸ்டா நட்பு… சட்டவிரோத பப் பார்ட்டி… இளம்பெண் படுகொ**!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

சென்னையில் முதலமைச்சர் ஜோசப்விஜயின் கட்சி நிர்வாகி பாலாஜி நடத்தும் சட்டவிரோத பப் க்கு தனது தோழி மற்றும் நண்பர்களுடன் சென்ற யான்சி என்கிற இளம்பெண் கார் ஏற்றி படுகொ***லை செய்துள்ளனர், இன்னொரு இளம்பெண் காயமடைந்துள்ளார்.

இறந்துப்போன யான்ஸி விழுப்புரம். பள்ளி படிக்கும்போதே இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருந்து பிரபலமானவராம், இந்தாண்டுதான் கல்லூரியில் சேரயிருந்தார். இன்ஸ்டாவில் அறிமுகமான கடலூர், திருவள்ளுர், சென்னையை சேர்ந்த 6 இளம்பெண்கள் சேர்ந்து பப்க்கு சென்று குடித்துள்ளார். இவர்களை இளம்பெண் எனச்சொன்னாலும் அனைவரும் சிறார்கள். சட்டப்படி மது அருந்தும் வயதல்ல, பப் க்கு போகும் வயதல்ல. அவர்களை பப்பில் அனுமதித்துள்ளார்கள், சரக்கு தந்துள்ளார்கள். பப் க்குள் நடந்த டான்ஸ், பிக்கப், டேட்டிங் விவகாரம் கொலையில் முடிந்துள்ளது. அந்த பசங்க, பெண்கள் அனைவரும் இன்ஸ்டா தொடர்புகள்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

திரும்ப திரும்ப நான் இங்கு சொல்வது ஒன்றுதான், சோசியல்மீடியா வழியாக ஒருவரை அவர் எந்ததுறை பிரபலமோ அல்லது சாதாரணமானவரே அவர்களை முழுவதுமாக நம்புவது என்பது தங்களுக்கு தாங்களே வைத்துக்கொள்ளும் ஆப்பு.

2026 June 11 - 17 Angusam Book

அந்த வகையில் நாம் பயன்படுத்தும் சமூகவளைத்தளங்களில் இன்ஸ்டா இப்போது பெரும் சமூக சீரழிவை உருவாக்கி வருகிறது. சென்னை, பெங்களுரூ, புதுச்சேரியில் வாரம் முழுவதும் பார்ட்டி நடத்துகிறார்கள். பாண்டிச்சேரிக்கு பணி நிமித்தமாக அடிக்கடி செல்வதாலும், பெங்களுரு சீரிஸ் எழுதியது முதல் இந்த பார்ட்டிகள் குறித்து இன்ஸ்டாவில் அடிக்கடி எனக்கு விளம்பர அழைப்பு வருகிறது. சாராயத்தை பாட்டிலில் அடைத்து விதவிதமாக பெயர் வைத்து விற்பனை செய்வதுப்போல, White dress party, pink dress party, Girls Party, Womans Party, Couples Party, Friends Party, Friday Party, Wedday Pary, Sunday Party, swming Party, Water Party, Juice Party என்கிற பெயர்களில் அழைப்பு விளம்பரம் வந்துக்கொண்டே இருக்கிறது. இதில் ஜோடியோடு வந்தால் கட்டணம் மிகமிக குறைவு, தனியாக வரும் பெண்களுக்கு ஃப்ரீ அல்லது மிக குறைவு. பல பார்ட்டிகளில் தனியாக வரும் பசங்களுக்கு அனுமதியில்லை என குறிப்பிட்டுள்ளார்கள்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இதன்பின்னால் உள்ள பிஷ்னஸ் பல்லாயிரம் கோடி மதிப்பிலானது. இது தெரியாமல் விட்டில் பூச்சிகளாய் ஜாலிக்காக போய் விழுந்து வாழ்க்கையை அழித்துக்கொள்கிறார்கள் இந்த 2கே மற்றும் ஜென் – ஸி தலைமுறையின் பெரும்பகுதியினர். தவறுகளை தவறு என தெரிந்தே செய்கிறார்கள், அதனை நார்மலைஸ் செய்கிறார்கள். முதலமைச்சர் விஜய்யும் அதைத்தான் செய்கிறார்.

மெட்ரோ நகரங்களில் உருவான இந்த சீரழிவு சிறுநகரங்களை நோக்கி வேகமாக வருகிறது.

—    ராஜா ராஜ்பிரியன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.