கோயில் தெப்பக் குளத்தில் மிதக்கும் நாப்கின்கள்! புனிதம் கெட்டு விட்டதாக பக்தர்கள் வேதனை!  

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய ஏரியின் கீழ் புறத்தில் அமைந்துள்ளது மிகவும் பழமையான காசி விஸ்வநாதர் ஆலயம். ஆலயத்தின் முன்புறம் புனித தீர்த்த குளமாக விளங்கும் மூங்கில் தெப்பக்குளம் உள்ளது.

மேலும் துறையூர் பகுதியில் உள்ள எந்த கோவிலில் திருவிழாக்கள் என்றாலும், முதன் முதலில் இந்த தெப்பக்குளத்தில் இருந்து தான் புனித நீர் எடுத்து ஊர்வலமாக சென்று தங்கள் கோவிலில் விழாக்களை கொண்டாடுவது வழக்கம்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்நிலையில் கோவிலின் முன்புறம் அமைந்துள்ள மூங்கில் தெப்பக்குளத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள்,  குவியல் குவியலாக கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் கோவிலின் புனிதம் கெட்டு விட்டதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒரே நேரத்தில் மொத்தமாக இவ்வளவு நாப்கின்கள் எங்கிருந்து வந்தது? ஏதேனும் தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டதா அல்லது பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி விடுதிகளில் இருந்து மொத்தமாக கொண்டு வந்து தெப்பக்குளத்தில் கொட்டினார்களா என்பது குறித்தும், துறையூர் நகராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ளதாக கூறப்படும் மூங்கில் தெப்பக்குளத்தின் நீரானது சுமார் பத்துக்கும் மேற்பட்ட வார்டு பகுதிகளுக்கு மக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்காக நடைமுறையில் உள்ள சூழலில் இத்தகைய அசுத்தான நீரை பயன்படுத்துவதால் டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுக்களால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் , கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோவில் தெப்பக்குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்து கோவிலின் புனிதத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.