அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தள்ளாடும் MSME நிறுவனங்கள் ! தலைதூக்க விடாத மின்வாரியத்தின் அடாவடி வசூல் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தமிழகத்தில் மின்வாரியத்தின் அடாவடி வசூல் கொள்கையின் காரணமாக, ஏற்கெனவே நலிவை சந்தித்து வரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMES) மேலும் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட மாவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக உயர்த்தப்பட்ட நிலையான கேட்புக் கட்டணத்தைக் (Fixed Demand Charges ) குறைத்திடவும், மின்வாரியத்தின் வருடாந்திர கட்டண உயர்வினைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜோசப் விஜயிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
குறிப்பாக, முன் எப்பொழுதும் இல்லாத வகையில், சமீப ஆண்டுகளில், மின்சார நிலையான கேட்புக் கட்டணங்கள், 1KWக்கு ரூபாய் 35 லிருந்து ரூ.165/- ஆக அதாவது, 450 சதவிகிதம் அளவுக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இது ஏற்கெனவே தொழிலை தக்கவைத்துக் கொள்ளவே தள்ளாடிக் கொண்டிருக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை தாங்க முடியாத நிதிச்சுமையில் தள்ளிவிடுவதாக குறிப்பிடுகின்றனர்.
மேலும், பொருட்கள் உற்பத்தியில் மின்சாரம் ஒரு முக்கிய உள்ளீட்டுச் செலவாக இருப்பதால், மின்வாரியத்தின் இத்தகைய கடுமையான கட்டண உயர்வுகள் உற்பத்திதிறன், போட்டித்தன்மை மற்றும் வேலை வாய்ப்புகளில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள். குறைந்த மின்னழுத்த Low Tension – LT IIIB , கட்டண பிரிவின் கீழ் வரும் MSME நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
இதற்கு தீர்வாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME) உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் ஆண்டு கட்டண உயர்வுகளைத் திரும்பப்பெற வேண்டும். அல்லது நிறுத்தி வைக்க வேண்டும். MSME நிறுவனங்களின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதிசெய்ய ஒருநிலையான மற்றும் தொழில் துறைக்கு உகந்த மின் கட்டணக் கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும். என்பதாக கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் முதல்வர் உடனடியாக தலையிட்டு, ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் (MSME) பாதுகாப்பதோடு, வேலை வாய்ப்புகளை குறிப்பாக பெண்களுக்கும், திறனற்ற தொழிலாளர்களுக்கும் உறுதி செய்து, மாநிலத்தின் தொழில் சூழல்அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதாகவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

HARINI JEWELLERS TRICHY

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.