அரசியலில் சேர ஆசை இருக்கிறது; எந்தக் கட்சியில் சேரலாம்?
என்னிடம் நிறைய இளைஞர்கள் கேட்பது என்னவென்றால் — அரசியலில் சேர ஆசை இருக்கிறது; எந்தக் கட்சியில் சேரலாம்?
என்னுடைய அப்பா ஏற்கனவே திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் என்று ஏதாவது ஒரு கட்சியில் இருப்பதாகவும், இதெல்லாம் அவர்களோடு முடியட்டும்;
புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று சிந்திப்பதாகவும் சொல்கிறார்கள்!!
எல்லா கட்சியும் முடிந்தது!!
சரி, இப்போது இளைஞர்கள் கண்முன்னே நிற்பது:
1. TVK (Tamilaga Vettri Kazhagam)
2. WTL (We The Leaders)
நான் எந்தக் கட்சியிலும் சேர வேண்டாம் என்றே சொல்வேன்!!!
என்னைப் பொறுத்தவரை — எல்லா நேரமும், எல்லோரிடமும் சொல்வது, படித்து முடித்தவுடன் அல்லது படிக்கும்போதே ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும்!!!
குனிந்து, நிமிர்ந்து உழைத்து சம்பாதித்து, அந்தக் காசில் செலவு செய்து சாப்பிட வேண்டும்.
பெற்றோர் பணத்தில் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு (18+ ) மேல் வாழக் கூடாது!!
அது மாதம் ₹5000 கூட இருக்கட்டும். உங்கள் எதிர்காலத்திற்கு பயன்படும் அறிவுபூர்வமான வேலையாக இருக்க வேண்டும். அந்த ₹5000-ல் செலவைச் சமாளித்து வாழ வேண்டும்!!
அதுதான் உங்கள் எதிர்காலத்தை கட்டமைக்கும்!! உங்கள் வாழ்வை சீரமைக்கும், உங்கள் பெற்றோருக்கு மதிப்பைக் கொடுக்கும், சமுதாயத்தில் உங்களை கெத்தாக வாழ வைக்கும்!!
அரசியலில் சேர்ந்து விஜய் போல, அண்ணாமலை போல ஜொலிப்பேன் என்று நிறைய பேர் கற்பனை செய்கிறீர்கள்!!
விஜய் 50 வயது வரை பணம் சம்பாதித்து, சம்பாதித்து, பிறகுதான் அரசியலுக்கு வந்துள்ளார்!!
கையில் கேஷாகவே 100 கோடிக்கு மேல் வைத்திருக்கிறார்…
சொத்து 500 கோடிக்கு மேல் சம்பாதித்து அப்படியே வைத்திருக்கிறார்!!!
அவருடன் இருக்கும் ஆதவ் அர்ஜுனாவும் பல ஆயிரம் கோடி வைத்திருப்பார்!!!
அடுத்து,
அண்ணாமலை பற்றி சொன்னால்!!
அண்ணாமலையின் பெற்றோர் ஏற்கனவே 80 ஏக்கர் நிலமும் ஏராளமான பணமும் வைத்திருக்கிறார்கள்.
ஆடு மேய்ப்பதே மிகப் பெரிய வருமானம். ஒரு 10 கிலோ குட்டி ₹10,000-க்கு விற்கிறது. 50 ஆடுகள், 50 குட்டிகள் விற்றால் ₹5 லட்சம் வருமானம்!!
அவர் IPS, IIM-ல் படித்துள்ளார்.
சம்பளமும் அப்படியே இருக்கும்!!
மனைவியும் அவரைவிட அதிகமாக சம்பாதிக்கிறார்கள்!!
ஆக, அவர்கள் குடும்பத்துக்கு தேவைக்கு மேல் வருமானம் வருகிறது!!!
உன்னைப் பற்றி சிந்தி — உனக்கு அரசியல் தேவையா என்று?
உன்னுடைய பொன்னான நேரத்தை அரசியலுக்குச் செலவு செய்ய வேண்டுமா?
உன்னுடைய உயர்வுக்குச் செலவு செய்ய வேண்டுமா?
அரசியல் என்பது புகழுக்கு பயன்படலாம்!!
பணம் சம்பாதிக்க பயன்படுத்தக் கூடாது!!
அப்படி பயன்படுத்தினால் — அசிங்கமாக, அவமானமாக, பாவத்தோடு வாழ வேண்டியிருக்கும்!!
அதிமுக / திமுக அரசியல்வாதிகளையும், அவர்கள் பின்னால் சுற்றும் அல்லக்கைகளையும் பாருங்கள்!!
யாராவது மதிக்கிறார்களா?
மதிப்பது போல நடிப்பார்கள்!!
ஒரு நல்ல காரில் சென்றால்கூட, திருடிச் சம்பாதித்த பணம் என்று பேசுவார்கள்!!
அவர்கள் குழந்தைகள் கூட திருட்டுப் பணத்தில் படிப்பது போல உலகம் பேசும்!!!
அரசியல்வாதிகள் வீடு கட்டுவதும், பந்தா பண்ணுவதும், மொத்தமும் திருடித்தான் செய்ய முடியும்!!!
தலைவர்கள் தான் அப்படி என்றால், கீழ்மட்டத்தினர் கூட திருடிக் கொடுத்த பணத்தில் பினாமி போல வாழ வேண்டும்.
கட்சி மேல்மட்டம் பணம் கொடுப்பார்கள். அதை செலவுக்கு பாதி, வீட்டுக்கு பாதி என்று எடுத்து வைத்து செலவு செய்வார்கள்!!
இதுபோன்ற ஈனப் பிழைப்பு பிழைத்துத்தான் வாழ வேண்டும்!!!
அதோடு, இன்றைய இளைஞர்களுக்கு திருடக்கூட தெரியாது!!!
திருடினால் மாட்டிக் கொள்வார்கள்!
பெற்றோர் — தற்குறிகளாகவும், பப்புகளாகவும், பிராய்லர் கோழிகளாகவும் வளர்த்து வைத்திருக்கிறார்கள்!!
இப்படி இருக்கும் இளைஞர்கள் அரசியலுக்குச் சென்றால் எப்படி இருக்கும்?
நாடு நன்றாக இருக்கும்??
கொஞ்சம் பேருக்கு வெற்றி கிடைக்கும்; நிறைய பேருக்கு தோல்வி கிடைக்கும்!!!
என்பதை உணருங்கள்!!!
நம்ம ஊரில் பிள்ளைகள் வீணாகப் போனதற்கும், முன்னேறாமல் போனதற்கும் முக்கிய காரணம் பெற்றோர்கள்!!
90% பேர் மகனை கங்காரு மாதிரி வயிற்றுக்குள் ஒரு பை உருவாக்கி வளர்க்கிறார்கள்!!!
சுயமாக உழைக்க, சுயமாகப் படிக்க கற்றுக் கொடுப்பது இல்லை!!!
அதனால் அறிவே இல்லாமல் பப்பு போல இருக்கிறார்கள்!!!
நல்ல வயிறு முட்ட தீனி கொடுத்து, பிராய்லர் கோழி மாதிரி நடக்கக்கூட முடிவதில்லை!!!
சோத்து முண்டகளாக, தற்குறி தத்திகளாக வளர்க்கிறார்கள்!!!
அவர்கள் மொத்தமும் கரப்பான் பூச்சி பார்ட்டியில் சேர்ந்து அரசியல் செய்ய மட்டுமே லாயக்கு!!!
பெற்றோர்கள் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும்?
நல்ல உதாரணம்!!
முதல்வர் விஜய் மாதிரி வளர்க்க வேண்டும்!!!
அவர் ஸ்ட்ராட்டஜி போட்டு வளர்க்கிறாரா என்று தெரியவில்லை!!!
ஊரே அவரும், பிள்ளைகளும் எதிரிகள் போல பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது!!
அதேதான் அவர் அப்பா சந்திரசேகருக்கும் இவருக்கும் எதிர் எதிர் போல பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது!!!
ஒரே ஒருவருக்குக்கூட மாற்றுச் சிந்தனை வராமல் எடுத்துச் செல்கிறார்கள்!!!
படிக்கும் பணம் கூட லோன் என்று தேர்தல் அப்டிவிட் செய்கிறார் விஜய்!!
தமிழ்நாடே விஜய் தன் பிள்ளைகளை கழற்றி விட்டுவிட்டார் என்று திட்டுகிறது!!!
அதே சமயம், விஜய் மகன் சஞ்சய் சுயமாக ஒரு படம் எடுத்து தனது சொந்த கிரியேட்டிவிட்டி எப்படி என்று காட்டுகிறார்!!
விஜய் நினைத்தால், திருச்சி கிழக்கில் வேட்பாளராக நிற்க வைத்து அரசியல் பண்ணலாம்!!
கருணாநிதி ஸ்டாலின், கனிமொழி, அழகிரி ஆகியோரை நிற்க வைத்த மாதிரி, ஸ்டாலின் உதயநிதியை நிற்க வைத்த மாதிரி!!!
சஞ்சய் வெற்றிபெற்றால் — விஜய்தான் வெற்றி பெற வைத்தார் என்று சொல்ல முடியாது !!
அதேதான் சந்திரசேகர் தான் விஜய் வெற்றி பெற வைத்தார் என்று சொல்ல முடியாது !!
—- ஆனால் — கருணாநிதி குடுபத்தினர் — குடும்பத்தால் மட்டுமே வெற்றி என்று ஊர் உலகம் பேசும்………….
ஆக, கருணாநிதி குடும்பம் கங்காரு பிள்ளைகளை போன்று பையில் போட்டு பொத்தி பொத்தி அரவணைத்து வளர்க்கிறது…..
விஜய் — சிங்கம் மாதிரி தனியாக வேட்டையாட விட்டு பிள்ளையை வளர்க்கிறார்!!!
விஜய் மாதிரி பிள்ளைகளை வளர்க்க வேண்டும் !! என்பது என் தனிப்பட்ட கருத்து .!!

Note :முக்கிய குறிப்பு
சரி, இளைஞர்கள் அரசியலில் சேரலாமா என்று கேட்ட கேள்விக்கு பதில்:
சேரலாம் — WTL அல்லது TVK அல்லது Independent-ஆக அரசியலில் போட்டியிடலாம்.
ஆனால், பகுதி நேரமாக இருக்க வேண்டும்!!
முழுநேர அரசியல் கூடவே கூடாது என்பது என் உறுதியான அறிவுரை!!!
என்னைப் பொறுத்தவரை, பகுதி நேர அரசியல் செய்வதற்குப் பதில் பகுதி நேர Businessman / Businesswoman ஆகலாம்!!!
இரண்டும் நல்ல சாய்ஸ்!!!
முக்கியமாக — படித்தவுடன் வேலைக்குச் சென்று விடுவது தலையாய கடமை!!!
— செந்தில் சின்னசாமி







Comments are closed, but trackbacks and pingbacks are open.