அர்ச்சகர் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் நடத்தப்படும் (பாஞ்சராத்ர ஆகமம்) ஓராண்டு இளநிலை வைணவ அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சியில் சேர விரும்புபவர்கள், உரிய படிவத்தில் விவரங்களை முழுமையாக அளித்து சான்றிதழ்களின் நகல்களுடன் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, இந்து மதத்தில் வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் நபர்கள் 31.5.2026 அன்று 14 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பயிற்சியின் போது, ஒவ்வொரு மாணவருக்கும் மாதந்தோறும் ரூ.10,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். தங்குமிடம், உணவு, உடை, பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் மருத்துவ வசதி அனைத்தும் கோயில் சார்பில் வழங்கப்படும்.
https://srirangamranganathar.hrce. tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். “இணை ஆணையர் / செயல் அலுவலர் ரங்கநாத சுவாமி கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி-620006” எனும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, 94433 98769, 84288 25526 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம் என ஸ்ரீரங்கம் கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான சிவராம்குமார் தெரிவித்துள்ளார்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.