அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்படாததால் சின்னம் பெறுவதில் ஏற்படும் இடர்பாடுகள்.

இந்திய அரசியலும் இசுலாமியர்களும் ! செய்ததும் செய்யத்தவறியதும் பாகம் – 04

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் மனிதநேய மக்கள் கட்சியாகும். இக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 2009. அந்த ஆண்டு ரயில் இஞ்ஞின் சின்னத்தில் போட்டியிட்டது. அதற்குப் பின்னர் ரயில் இஞ்ஜின் சின்னத்தை மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட மாகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனா பெற்றதால் அடுத்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. அதில் இராமநாதபுரத்தில் பேரா.ஜவாஹிருல்லாவும், ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும் வென்றனர். பின்னர் ஏனோ தேர்தல் ஆணையமானது மெழுகுவர்த்தி சின்னத்தை பட்டியலிடப்பட்ட சின்னங்கள் வரிசையில் இருந்தே தூக்கியது. பின்னர் 2016ல் திமுக கூட்டணியில் கோப்பை மற்றும்,தட்டு (Cup and Saucer) சின்னத்தில் போட்டியிட்டது. சின்னத்தை பொதுமக்களிடம் சேர்ப்பதில் வெற்றி பெறாததால் 2016ல் தேர்தலில் போட்டியிட்ட 4 தொகுதியிலும் தோல்வி. பின்னர் 2021ல் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது. இப்போது 2026 லும் இதே நிலையே தொடர்கிறது.
இதேபோல் SDPIக்கும் கேஸ் சிலிண்டர், முகம் பார்க்கும் கண்ணாடி, கடித உறை, பிரஷர் குக்கர் என தேர்தலுக்கு தேர்தல் ஒவ்வொரு சின்னம். குறைந்தபட்சம் மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற்றால் மட்டுமே சொந்த சின்னத்தைப் பெற முடியும்.
தமிழ்நாட்டில் இஸ்லாமியக்கட்சிகள் மாநிலக்கட்சி அங்கீகாரம் பெறுவது சாத்தியமா?
தற்போதுள்ள சூழ்நிலையில் கண்டிப்பாக சாத்தியம் இல்லை. ஏனென்றால் எந்த ஒரு கட்சியும் தனியாக நின்றோ அல்லது திமுக அல்லது அதிமுக உடன் கூட்டணி வைத்தோ போட்டியிட்டாலும் மாநிலக்கட்சி அங்கீகாரத்திற்குத் தேவையான 5 நிபந்தனைகளில் எந்தவொரு நிபந்தனையையும் பூர்த்தி செய்ய முடியாது. தமிழ்நாட்டில் அந்த அளவுக்கு முஸ்லிம் வாக்காளர்கள் இல்லை. இந்திய அரசும் 2011க்கு பின்னர் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் முஸ்லிம் வாக்காளர்கள் எண்ணிக்கை சராசரியாக 7% சதவீதம் மட்டுமே.

2011க்கு பின்னர் இந்த 15 வருடங்களில் உயர்ந்திருக்கவும் வாய்ப்பில்லை. எவ்வளவு புதிய வாக்காளர்கள் சேர்ந்திருக்கின்றார்களோ அந்த அளவுக்கு வயதான வாக்காளர்கள் இறந்திருப்பர். மேலும் முஸ்லிம்களும் “ரிஸ்க்” தருபவன் அல்லாஹ் என்பதை மறந்து ஒரு குழந்தை போதும் அல்லது இரண்டு குழந்தைகள் போதும் என்ற குடும்பக்கட்டுப்பாட்டு மனநிலைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

இதையும் தாண்டி அதிகம் என வாதிடுபவர்கள் கையில் புள்ளிவிபரங்கள் இருக்கிறதா? கிராமங்களில், சிற்றூர்களில் வேண்டுமானால் இருக்கலாம். பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் வார்டு வாரியாகவோ, பூத் வாரியாகவோ முஸ்லிம் வாக்காளர்கள் பற்றிய விபரங்கள் எந்த இஸ்லாமிய அரசியல் கட்சியினர் வசம் உள்ளது?

2026 June 11 - 17 Angusam Book

அதேபோல் கிராமங்கள், சிற்றூர்கள் தவிர்த்து பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் வார்டு வாரியாகவோ, பூத் வாரியாகவோ முஸ்லிம் வாக்காளர்கள் பற்றிய விபரங்கள் எந்த பள்ளிவாசல் ஜமாத்திடமாவது உள்ளதா? ஒரு சில ஊர் ஜமாத்திடம் இருக்கலாம் மற்றபடி கண்டிப்பாக கிடையாது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இப்படி புள்ளிவிபரங்கள் இல்லாமல் அரசியல் எப்படி செய்வது? நம்மிடம் அரசியல் ஆசை இருக்கும் அளவிற்கு அரசியல் விழிப்புணர்வு கிடையாது என்பதே உண்மை. சூழ்நிலை இவ்வாறு இருக்கையில் மாநிலக்கட்சி அங்கீகாரம் எவ்வாறு பெறுவது?

தொடரும் …
– H.உபைதுல்லாஹ்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.