அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பூட்டிய அறைக்குள் சிக்கிய பெண் ! தீயணைப்புத் துறை அதிரடி !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

மதுரை ஐராவத நல்லூர் வேலன் தெரு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வீட்டின் அறைக்குள் தாழ்ப்பாள் போட்டு திறக்க முடியாமல் சிக்கி கொண்டார். பெண்ணை தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ளோர் அவரை மீட்க பல்வேறு முயற்சிகளை செய்தனர். ஆனால் பூட்டிய வீட்டில் சிக்கிய பெண்ணுக்கு கதவைத்திறக்க வழி தெரியவில்லை.

அதனை தொடர்ந்து சென்னை நவீன கட்டுப்பாட்டறை மூலம் அனுப்பானடி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்புகுழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இயந்திரங்கள் கடப்பாறை உள்ளிட்ட மீட்பு உபகரணங்களின் உதவியுடன் அறையின் கதவு திறக்கப்பட்டு உள்ளே சிக்கியிருந்த சுமார் 35 வயது பெண் எந்தவித காயமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

பின்னர் அந்தப் பெண் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினரின் துரிதமான செயல்பாட்டை பொதுமக்கள் பாராட்டினர்.

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.