அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழக ஆசிரியர் வெற்றி கூட்டணி மாநில செயற்குழு கூட்டம்

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தமிழக ஆசிரியர் வெற்றிக் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில், மாநிலத் தலைவர் ஜெ. வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
மாநில துணைத் தலைவர் இரா. சக்திவேல், மாநில துணைச் செயலாளர் செ. அருண்குமார், மாநில மகளிரணி செயலாளர்கள் ம. ஆனந்தவள்ளி, சங்கீதா, லோகநாயகி, மாநில ஊடகப் பிரிவு செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்புச் செயலாளர் செ. சார்லஸ் வரவேற்றார். மாநிலப் பொருளாளர் மோ. தங்கபுஷ்பராஜ் வரவு-செலவு அறிக்கையை வாசித்தார். பொதுச் செயலாளர் கோ. முருகன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.
கூட்டத்தில், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும் இயக்கமாக உருவெடுத்து தமிழக மக்களுக்கு நல்லாட்சியை தந்திட்ட மக்களின் முதல்வர் தளபதி ச. ஜோசப் விஜய்செயற்குழு தனது பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை தாயுள்ளத்தோடு விரிவுபடுத்திய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு இரண்டு சதவீத அகவிலைப்படையை தாயுள்ளத்தோடு வழங்கிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழக ஆசிரியர் வெற்றிக் கூட்டணி மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.