காவிரி பால போக்குவரத்து மாற்றம்! கிராம மக்கள் சாலை மறியல் ! 50க்கும் மேற்பட்டோர் கைது !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி – சென்னை புறவழிச்சாலையில், சஞ்சீவி நகர் மற்றும் திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அப்பாலம் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லணை பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி – சென்னை புறவழிச்சாலையில் உள்ள பாலத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கியுள்ளன. நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்புப் பணிகள் சுமார் மூன்று மாதங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அப்பாலம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணி
காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணி

இந்த வார அங்குசம் வார இதழில்…

பாலம் மூடப்பட்டதன் காரணமாக, கல்லணை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் அன்றாடத் தேவைகளுக்கும் வேலைகளுக்கும் செல்ல வெகுதூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் சிரமத்திற்குள்ளான பொதுமக்கள், மாற்று வழியால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்து, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 250 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணி
இந்த சாலை மறியல் காரணமாக 4 மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசல் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட வருவாய் அதிகாரி பாலாஜி,திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி  மற்றும் அதிகாரிகள், காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

4 மணி நேரம் நீடித்த போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கைவிடப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக பேச்சுவார்த்தையின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. அப்போது போராட்டக்காரர்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்ய முயன்றனர்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் உதவி கமிஷனர் விஜயகுமார் கீழே விழுந்து காயம் அடைந்தார். இந்த தள்ளுமுள்ளுவில் சிலர் காயமடைந்தனர். தொடர்ந்து போராட்டக்காரர்கள் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.