அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நியோமேக்ஸ் : ரிசார்ட்ஸ் … டிரைவ் இன் ஹோட்டல் … கேட்டரிங் காலேஜ் … ஃபேக்டரி … ஏலத்துக்கு வந்த சொத்துக்கள்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

முதலீட்டாளர்களிடம் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், நிலமாகவோ பணமாகவோ திருப்பித்தர முடியாமல் வழக்கில் சிக்கி, தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் விசாரணையில் இருந்து வரும் நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை விற்று காசாக்கி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்துக் கொடுக்கும் நோக்கில், பொது ஏல நடைமுறை தொடர்ந்து வருகிறது.
ஏற்கெனவே, இரண்டாம் கட்ட ஏலம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இந்த ஏலத்தில் தமிழகத்தின் 29 புராஜெக்டுகளில் உள்ள டி.டி.சி.பி. அப்ரூவ்டு பெறப்பட்ட சுமார் 11,000-க்கு அதிகமான பிளாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இதற்கு இணையாகவே அடுத்த கட்ட ஏலத்துக்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியிருக்கிறது. ஜூன்-20 ஆம் தேதியிட்டு நியோமேக்ஸ் வழக்கின் தகுதிவாய்ந்த அதிகாரியான, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு எஸ்.பி.சரவணக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஜூன்-22 அன்று தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் இடம்பெற்றுள்ளது.
* 30.69 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குற்றாலம் ரிசார்ட்ஸ், தொடக்கவிலை ரூ.43,19,80,000/-
* 2.64 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கொடைரோடு டிரைவ் இன் ஹோட்டல் தொடக்கவிலை ரூ 5, 06,25,000/-
* 3.12 ஏக்கரில் அமைந்துள்ள கொடைரோடு கேட்டரிங் இன்ஸ்டிடியூட் தொடக்கவிலை ரூ 5,72,50,000/-
* 2.49 ஏக்கரில் அமைந்துள்ள பேவர் பிளாக் தொழிற்சாலை தொடக்க விலை ரூ1,42,18,125/-
முக்கிய தேதிகள் :
ஏல அறிவிப்பு வெளியான தேதி : 22.06.2026
ஏலம் நடைபெறும் தேதி : 22.07.2026 மற்றும் 23.07.2026
கள ஆய்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு : 22.06.2026 முதல் 21.07.2026 வரையில்
ஏல சொத்துக்கள் தொடர்பான ஆவணம் மற்றும் கள ஆய்வு உதவிக்கு பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு அலுவலர்களை தொடர்பு கொள்ள : 9080381065 | 8778245559 | மின்னஞ்சல் முகவரி : eowmadurai2@gmail.com
MSTC வலைதளத்தில் பதிவு செய்வது மற்றும் ஏலத்தில் பங்கேற்பது தொடர்பான சந்தேகங்களுக்கு MSTC அலுவலர்களை தொடர்பு கொள்ள : 9499054101 – 9499054102 – 9499054103 – 9499054104
MSTC வலைதளம் : https://www.mstcecommerce.com/ www.mstcindia.co.in

– அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.