அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ ( வெப் சீரிஸ்)

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘எஸ்.எஸ்.குரூப்’ சிங்காரவேலன் தயாரித்து ஜி5 ஓடிடியில் கடந்த 26- ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது இந்த வெப் சீரிஸ். சுவிர் சுதாகர் டைரக்ட் பண்ணியுள்ளார். வைபவ் முருகேசன், அன்பழகன், வெங்கட் பாலமுரளி, லாவண்யா, ஜகபர் சாதிக் என இளைஞர்கள் பட்டாளத்துடன் மொட்டை ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் ராம் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: பி.எம்.ராஜ்குமார், எடிட்டிங்: பவித்ரன், ஆர்ட் டைரக்டர்: கலைச் செல்வன்.

திருச்சி அருகே உள்ள ஒரு ஊரில் வைபவ் முருகேசன் தலைமையில் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ் என்ற கிரிக்கெட் டீம் இருக்கு. உள்ளூர் போட்டிகளில் மொட்டை ராஜேந்திரன் டீமை ஜெயித்து கப் அடிக்கிறார்கள். டீக்கடை நடத்தும் விவேக் பிரசன்னா இந்த டீமுக்கு சப்போர்ட் பண்ணுகிறார். மம்மட்டியான் ஸ்டார்ஸில் ஸ்டார் ப்ளேயரான வைபவ் மீது லாவண்யாவுக்கு லவ். இவர்களின் லட்சியமே சென்னைக்கு போய் ஐபிஎல் மேட்சில் தல தோனியைப் பார்க்க வேண்டும் என்பது தான். இதற்காக பல வழிகளில் முயற்சி பண்ணியும் காசு கிடைக்காததால் ஊர்த் தலைவரின் வீட்டில் 30 ஆயிரத்தை திருடி சென்னைக்கு போகிறார்கள்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

'மம்மட்டியான் ஸ்டார்ஸ்'அங்கே போய் ஏடாகூடமாக மாட்டியதால்.  சம்பத் ராமுடன் சேர்ந்து கிரிக்கெட் சூதாட்டத்தில் இறங்குகிறார்கள். அதுக்கப்புறம்…. அதுக்கப்புறம் என்னன்னு நாம வேற தனியா விளக்கணுமாக்கும். மொத்தம் ஆறு எபிசோட். ஆறுமே நம்மள ரணகளமாக்கி ரத்தம் வர வச்சிரும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஒரு எபிசோடில் ஒரு சீனாவது இம்ப்ரஸ் பண்ணனுமே…. ஊஹும்…. எதுவுமே தேறல உருப்படல. ஏற்கனவே தமிழ்நாட்டில் தற்குறித்தனமான, சைக்கோத்தனமான, ஆபத்தான இளைஞர்கள் கூட்டம் நடமாடுது. இந்த லட்சணத்தில் “திருடு, சூதாடு, குடிச்சிட்டு கும்மாளம் போடு தப்பேயில்லை” ன்னு இந்த வெப் சீரிஸ் டைரக்டர் சுவிர் சுதாகர் அருளாசி வழங்கியிருக்கார். நாடு வெளங்கிரும்டா டேய்…….

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

ஜி- 5 வெப் சீரிஸ்களிலேயே மிக மிக மோசமான, தப்பான வெப் சீரிஸ் இந்த ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’. இதை பார்க்காமல் தவிர்ப்பதே உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் நல்லது.

அங்குசம் பார்வையில் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ ( வெப் சீரிஸ்) 28/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.