அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

5 மாதங்களாகியும் திறக்கப்படாத நூலக கட்டிடம் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

காட்டுப்புத்தூரில் உள்ள நூலகம் தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. இதனை இப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் காட்டுப்புத்தூர் பஸ் நிலையம் அருகே அரசு சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நூலகக் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த நூலகம் கட்டிமுடித்து 5 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கூறும்  போது,”மாணவர்களின் கல்வித்தேவையை பூா்த்தி செய்ய அரசு பல லட்ச ரூபாய் செலவில் பஸ் நிலையம் எதிரே புதிய நூலகத்தைக் கட்டியது. ஆனால், அதிகாரிகள் மற்றும் மக்கள்  பிரதிநிதிகளின் அலட்சியத்தால் 5 மாதங்களாக இது பூட்டியே கிடக்கிறது. இதனால் அரசுப் பணம் வீணாவதோடு, போதிய இடவசதியின்றி தனியார் கட்டிடத்தில் வாசகர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், நூலகத் துறையும் உடனடியாக தலையிட்டு, இந்த புதிய நூலகக் கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.